இந்தியா தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்ததுடன் இராமேஸ்வரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தையும் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இலங்கை பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று சென்னுக்கு திரும்பிய பிரதமர் மோடி, ராம நவமி நாளான இன்று, ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார்.
பின்னர்சாலை பாலத்திலிருந்து ஒரு ரயிலையும், கப்பலையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். செங்குத்து பாலம் தூக்கப்பட்டு, பாலத்திற்கு அடியே கப்பல் போக்குவரத்தும் நடந்தது.
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- இராமேஸ்வரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால், புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019 - ஆம் ஆண்டு தொடங்கி 2024 இறுதியில் நிறைவடைந்தது
புதிய பாம்பன் பாலத்தின் சில சிறப்பம்சங்களாக குறித்த பாலத்தை கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து செல்ல பாலம் நடுவில் 240 அடி நீளம் 570 டன்னில் வடிவமைத்த செங்குத்து தூக்கு பாலம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த தூக்கு பாலத்தின் இருமுனையிலும் 34 மீ உயரத்தில் இரு இரும்பு கோபுரங்கள் உள்ளன. இதன் மேல் தளத்தில் இரு ராட்சத இரும்பு வீல்கள் உள்ளன. இந்த வீலில் துாக்கு பாலத்தை திறந்து மூட கம்பி வடங்கள் சுற்றி உள்ளனர். இந்த பாலத்தை 'லிப்ட்' முறையில் திறந்து மூடும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதனை ஹைட்ராலிக் இயந்திரத்தில் பொருத்தி உள்ளதால் ஒருமுறை திறக்க 5 நிமிடம் 30 வினாடிகள் ஆகும்.
இதை 17 மீ., உயரம் வரை திறந்து வைத்திருக்க முடியும் என்பதால் கனரக சரக்கு கப்பல்கள், கடற்படை கப்பல்கள், எவ்வித சிரமம் இன்றி கடந்து செல்லலாம்.
புதிய ரயில் பாலம் மற்றும் துாக்கு பாலத்தில் மின்சார ரயில்கள் அதுவும் இரு ரயில்கள் செல்லும் வகையிலும் வடிவமைத்துள்ளனர். புதிய பாலத்தில் ஒரு வாரத்திற்கு 134 ரயில்கள், அதுவும் அதிகபட்சமாக 75 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும்.
35 ஆண்டிற்கு துருப்பிடிக்காத வகையில் இந்த ரசாயனம் கலந்த பெயின்ட் பூசியதற்கு செலவு ஒரு கோடி ரூபாயை தாண்டியது. இந்த உயர் ரக பெயின்ட் இந்தியாவில் வேறு எந்த ரயில் பாலத்திற்கும் பூசப்படவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த பாலத்தின் அழகிய காட்சியை பிரதமர் மோடி தனது x தளத்தில் பகிர்ந்துள்ளார்
புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்த மோடி - பாலத்தின் அழகிய காட்சியை தனது X தளத்தில் பகிர்ந்தார் இந்தியா தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்ததுடன் இராமேஸ்வரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தையும் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.இலங்கை பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று சென்னுக்கு திரும்பிய பிரதமர் மோடி, ராம நவமி நாளான இன்று, ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார்.பின்னர்சாலை பாலத்திலிருந்து ஒரு ரயிலையும், கப்பலையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். செங்குத்து பாலம் தூக்கப்பட்டு, பாலத்திற்கு அடியே கப்பல் போக்குவரத்தும் நடந்தது.இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- இராமேஸ்வரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால், புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019 - ஆம் ஆண்டு தொடங்கி 2024 இறுதியில் நிறைவடைந்தது புதிய பாம்பன் பாலத்தின் சில சிறப்பம்சங்களாக குறித்த பாலத்தை கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து செல்ல பாலம் நடுவில் 240 அடி நீளம் 570 டன்னில் வடிவமைத்த செங்குத்து தூக்கு பாலம் பொருத்தப்பட்டுள்ளது.இந்த தூக்கு பாலத்தின் இருமுனையிலும் 34 மீ உயரத்தில் இரு இரும்பு கோபுரங்கள் உள்ளன. இதன் மேல் தளத்தில் இரு ராட்சத இரும்பு வீல்கள் உள்ளன. இந்த வீலில் துாக்கு பாலத்தை திறந்து மூட கம்பி வடங்கள் சுற்றி உள்ளனர். இந்த பாலத்தை 'லிப்ட்' முறையில் திறந்து மூடும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதனை ஹைட்ராலிக் இயந்திரத்தில் பொருத்தி உள்ளதால் ஒருமுறை திறக்க 5 நிமிடம் 30 வினாடிகள் ஆகும்.இதை 17 மீ., உயரம் வரை திறந்து வைத்திருக்க முடியும் என்பதால் கனரக சரக்கு கப்பல்கள், கடற்படை கப்பல்கள், எவ்வித சிரமம் இன்றி கடந்து செல்லலாம்.புதிய ரயில் பாலம் மற்றும் துாக்கு பாலத்தில் மின்சார ரயில்கள் அதுவும் இரு ரயில்கள் செல்லும் வகையிலும் வடிவமைத்துள்ளனர். புதிய பாலத்தில் ஒரு வாரத்திற்கு 134 ரயில்கள், அதுவும் அதிகபட்சமாக 75 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும். 35 ஆண்டிற்கு துருப்பிடிக்காத வகையில் இந்த ரசாயனம் கலந்த பெயின்ட் பூசியதற்கு செலவு ஒரு கோடி ரூபாயை தாண்டியது. இந்த உயர் ரக பெயின்ட் இந்தியாவில் வேறு எந்த ரயில் பாலத்திற்கும் பூசப்படவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த பாலத்தின் அழகிய காட்சியை பிரதமர் மோடி தனது x தளத்தில் பகிர்ந்துள்ளார்