• Jan 11 2025

மட்டு. மாநகரசபையில் மாற்றங்களுடன் அர்ப்பணிப்புமிக்க சேவை : புதிய ஆணையாளர் என்.தனஞ்செயன்

Tharmini / Jan 1st 2025, 4:36 pm
image

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றபின்னர் நாட்டிலும் மாகாணங்களிலும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றது.

அந்த அடிப்படையில் இந்த மாநகரத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும், அர்ப்பணிப்புமிக்க சேவையினை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக கடமையேற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தெரிவித்தார்.

புதிய ஆண்டில் அரசாங்க உத்தியோகத்தர்கள் கடமையேற்கும் நிகழ்வு, கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று(01)  நாடெங்கிலும் உள்ள அரச திணைக்களங்களில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று காலை புதிய ஆணையாளர் புதுவருடத்தில் கடமையேற்றதுடன் புதுவருட அரச ஊழியர்கள் கடமையேற்றும் நிகழ்வும் கிளின் ஸ்ரீலங்கா திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் நடைபெற்றது.

இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக கடமையேற்க வருகைதந்த என்.தனஞ்செயன் மாநகரசபை உத்தியோகத்தர்கள்,ஊழியர்களினால் வரவேற்கப்பட்டதுடன் மாநகரசபையில் உள்ள செல்வ கணபதி ஆலயத்தில் விசேட புத்தாண்டு பூஜையும் கலந்துகொண்டார்.

அதனை தொடர்ந்து அரச ஊழியர்கள் புத்தாண்டில் கடமையேற்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் இதன்போது அரச கடமை உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

கடமையேற்கும் நிகழ்வினை தொடர்ந்து தேசிய நிகழ்வாக நடைபெறும் கிளின் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்ட நிகழ்வு நேரடி ஒளிபரப்பு உத்தியோகத்தர்களுக்கு காண்பிக்கப்பட்டதுடன் நிகழ்விலும் இணைந்திருந்தனர்.

இந்த நிகழ்வினை தொடர்ந்து புதிய மாநகர ஆணையாளராக இன்று(01) தனது கடமைகளை தனஞ்செயன் கடமையேற்றார்.

இந்த நிகழ்வில் மாநகரசபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த புதிய ஆணையாளர், பொதுமக்கள் பல தேவைகளுக்காக மாநகரசபைக்கு வருகின்றனர். அவர்களை இன்முகத்துடன் வரவேற்று சிறப்பான சேவையினை வழங்கவேண்டியது உத்தியோகத்தர்களின் கடமையாகும்.

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றபின்னர் நாட்டிலும் மாகாணங்களிலும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றது.அந்த அடிப்படையில் இந்த மாநகரத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும்,அர்ப்பணிப்புமிக்க சேவையினை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும்.

அரச உத்தியோகத்தர்களை பொறுத்தவரையில் நீதியானதும் நேர்மையானதும் பக்கசார்பற்றதும் இலஞ்சம்,ஊழல்,தரகுப்பணம்பெறும் நிலைமைகள் அற்ற மாநகரசபையாக இதனை கட்டியெழுப்பி மக்களுக்கான சேவையினை வழங்கவேண்டும்.

சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்து இலங்கையில் முதன்மையானதும் முன்னுதாரணமான மாநகரசபையாகவும் மட்டக்களப்பு மாநகரசபையினை மாற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பு தேவையாகும்.

கழிவகற்றும் செயற்பாடுகளில் மக்களின் ஒத்துழைப்பினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.கடந்த காலத்தில் வீதிகளில் குப்பைகளை வீசிச்செல்லும் நிலைமையும் காணப்படுகின்றது.

வரியிறுப்பாளர்கள் இந்த கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.எதிர்காலத்தில் குப்பைகளை சேகரிக்கும் பணிகள் குறித்த நாளில் குறித்த நேரத்தில் முன்னெடுக்கப்படும் என்பதை நான் உறுதிப்படுத்துவேண்.

அந்தவேளையில் குப்பைகளை தரம்பிரித்து வழங்கவேண்டும்.

மட்டக்களப்பு மாநகரசபை அதிகளவான சுற்றுலாப்பயணிகள், வெளிநாட்டவர்கள் வந்துசெல்லும் இடம்.அவர்கள் விரும்பும் வகையில் அழகான, மாநகரசபையாக மாற்றுவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும்.

அதேபோன்று பொதுமக்கள் தங்களது வரிகளை உரிய காலப்பகுதிக்குள் செலுத்தவேண்டும்.

மக்கள் வரிநிலுவைகளை செலுத்தி மாநகரசபையின் வருமானத்தினை அதிகரிக்கும்போது எந்த ஊழல்களும் இல்லாமல் அந்த நிதி மீண்டும் மக்களுக்கான சேவையாக வழங்கப்படும் என்பதை நான் ஆணையாளர் என்ற வகையில் உறுதியளிக்கின்றேன்.






மட்டு. மாநகரசபையில் மாற்றங்களுடன் அர்ப்பணிப்புமிக்க சேவை : புதிய ஆணையாளர் என்.தனஞ்செயன் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றபின்னர் நாட்டிலும் மாகாணங்களிலும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றது.அந்த அடிப்படையில் இந்த மாநகரத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும், அர்ப்பணிப்புமிக்க சேவையினை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக கடமையேற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தெரிவித்தார்.புதிய ஆண்டில் அரசாங்க உத்தியோகத்தர்கள் கடமையேற்கும் நிகழ்வு, கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று(01)  நாடெங்கிலும் உள்ள அரச திணைக்களங்களில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று காலை புதிய ஆணையாளர் புதுவருடத்தில் கடமையேற்றதுடன் புதுவருட அரச ஊழியர்கள் கடமையேற்றும் நிகழ்வும் கிளின் ஸ்ரீலங்கா திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் நடைபெற்றது.இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக கடமையேற்க வருகைதந்த என்.தனஞ்செயன் மாநகரசபை உத்தியோகத்தர்கள்,ஊழியர்களினால் வரவேற்கப்பட்டதுடன் மாநகரசபையில் உள்ள செல்வ கணபதி ஆலயத்தில் விசேட புத்தாண்டு பூஜையும் கலந்துகொண்டார்.அதனை தொடர்ந்து அரச ஊழியர்கள் புத்தாண்டில் கடமையேற்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் இதன்போது அரச கடமை உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.கடமையேற்கும் நிகழ்வினை தொடர்ந்து தேசிய நிகழ்வாக நடைபெறும் கிளின் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்ட நிகழ்வு நேரடி ஒளிபரப்பு உத்தியோகத்தர்களுக்கு காண்பிக்கப்பட்டதுடன் நிகழ்விலும் இணைந்திருந்தனர்.இந்த நிகழ்வினை தொடர்ந்து புதிய மாநகர ஆணையாளராக இன்று(01) தனது கடமைகளை தனஞ்செயன் கடமையேற்றார்.இந்த நிகழ்வில் மாநகரசபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த புதிய ஆணையாளர், பொதுமக்கள் பல தேவைகளுக்காக மாநகரசபைக்கு வருகின்றனர். அவர்களை இன்முகத்துடன் வரவேற்று சிறப்பான சேவையினை வழங்கவேண்டியது உத்தியோகத்தர்களின் கடமையாகும்.புதிய அரசாங்கம் பொறுப்பேற்றபின்னர் நாட்டிலும் மாகாணங்களிலும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றது.அந்த அடிப்படையில் இந்த மாநகரத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும்,அர்ப்பணிப்புமிக்க சேவையினை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும்.அரச உத்தியோகத்தர்களை பொறுத்தவரையில் நீதியானதும் நேர்மையானதும் பக்கசார்பற்றதும் இலஞ்சம்,ஊழல்,தரகுப்பணம்பெறும் நிலைமைகள் அற்ற மாநகரசபையாக இதனை கட்டியெழுப்பி மக்களுக்கான சேவையினை வழங்கவேண்டும்.சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்து இலங்கையில் முதன்மையானதும் முன்னுதாரணமான மாநகரசபையாகவும் மட்டக்களப்பு மாநகரசபையினை மாற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பு தேவையாகும்.கழிவகற்றும் செயற்பாடுகளில் மக்களின் ஒத்துழைப்பினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.கடந்த காலத்தில் வீதிகளில் குப்பைகளை வீசிச்செல்லும் நிலைமையும் காணப்படுகின்றது.வரியிறுப்பாளர்கள் இந்த கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.எதிர்காலத்தில் குப்பைகளை சேகரிக்கும் பணிகள் குறித்த நாளில் குறித்த நேரத்தில் முன்னெடுக்கப்படும் என்பதை நான் உறுதிப்படுத்துவேண்.அந்தவேளையில் குப்பைகளை தரம்பிரித்து வழங்கவேண்டும்.மட்டக்களப்பு மாநகரசபை அதிகளவான சுற்றுலாப்பயணிகள், வெளிநாட்டவர்கள் வந்துசெல்லும் இடம்.அவர்கள் விரும்பும் வகையில் அழகான, மாநகரசபையாக மாற்றுவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும்.அதேபோன்று பொதுமக்கள் தங்களது வரிகளை உரிய காலப்பகுதிக்குள் செலுத்தவேண்டும்.மக்கள் வரிநிலுவைகளை செலுத்தி மாநகரசபையின் வருமானத்தினை அதிகரிக்கும்போது எந்த ஊழல்களும் இல்லாமல் அந்த நிதி மீண்டும் மக்களுக்கான சேவையாக வழங்கப்படும் என்பதை நான் ஆணையாளர் என்ற வகையில் உறுதியளிக்கின்றேன்.

Advertisement

Advertisement

Advertisement