• Nov 22 2024

வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ள பணம்! விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

Chithra / May 29th 2024, 1:35 pm
image

 

நாட்டிலுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 2.5 பில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறுபோகப் பருவத்தில் நெற்பயிர்ச் செய்கை மானியத் திட்டத்தின் கீழ் குறித்த பணம் விவசாயிகளின் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

213,771 விவசாயிகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி 167,362 ஹெக்டேயர் நெற்பயிர்ச் செய்கைக்காக இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வருடம் சுமார் 450,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ள பணம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்  நாட்டிலுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 2.5 பில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.சிறுபோகப் பருவத்தில் நெற்பயிர்ச் செய்கை மானியத் திட்டத்தின் கீழ் குறித்த பணம் விவசாயிகளின் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.213,771 விவசாயிகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.அதன்படி 167,362 ஹெக்டேயர் நெற்பயிர்ச் செய்கைக்காக இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இந்த வருடம் சுமார் 450,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement