• Apr 26 2024

அதிகமாக சேட்டை செய்து பொலிஸாரிடம் சிக்கிய குரங்கு - தீயாய் பரவும் தகவல்!

Tamil nila / Dec 21st 2022, 11:41 pm
image

Advertisement

குரங்குகளில் தொல்லை தாங்க முடியாமல் குரங்கை பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த விநோத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இந்தியா, மத்திய பிரதேச மாநிலம் ராஜ்நகரில் நீண்ட காலமாக குடியிருப்புபகுதிகளில் உள்ளவர்களைச் சுற்றி சுற்றி வந்து அங்கு வசிப்பவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளது.


குரங்கின் தொல்லை தாங்கமுடியாமல் மக்கள் பலமுறை விரட்ட முயன்றுள்ளனர். குரங்குகளை விரட்ட வழி தெரியாமல் தோற்றுப்போன குடியிருப்புவாசி ஒருவர், தனது வீட்டு ஜன்னலில் அமர்ந்திருந்த குரங்கை பிடித்து, தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி, பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார்.


இவரால் பிடிக்கப்பட்ட குரங்கு, அமைதியாக பின்சீட்டில் அமர்ந்து அவருடன் வந்துள்ளது.பொலிஸாரிடம் குரங்கை ஒப்படைந்த அந்த நபர் குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் தான் பொலிஸில் ஒப்படைக்க வந்ததாக தெரிவித்துள்ளார்.


பிடிப்பட்ட குரங்கை பொலிஸார் காட்டுப்பகுதியில் விடுமாறு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.ஆனால் அந்த குரங்கு, வனத்துறையினரின் பிடியிலிருந்து தப்பித்து விட்டதாக அதிகாரிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அக்குரங்கை இருசக்கர வாகனத்தில் ஏற்றிவரும் காணொளி  தற்போது சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றது.

அதிகமாக சேட்டை செய்து பொலிஸாரிடம் சிக்கிய குரங்கு - தீயாய் பரவும் தகவல் குரங்குகளில் தொல்லை தாங்க முடியாமல் குரங்கை பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த விநோத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்தியா, மத்திய பிரதேச மாநிலம் ராஜ்நகரில் நீண்ட காலமாக குடியிருப்புபகுதிகளில் உள்ளவர்களைச் சுற்றி சுற்றி வந்து அங்கு வசிப்பவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளது.குரங்கின் தொல்லை தாங்கமுடியாமல் மக்கள் பலமுறை விரட்ட முயன்றுள்ளனர். குரங்குகளை விரட்ட வழி தெரியாமல் தோற்றுப்போன குடியிருப்புவாசி ஒருவர், தனது வீட்டு ஜன்னலில் அமர்ந்திருந்த குரங்கை பிடித்து, தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி, பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார்.இவரால் பிடிக்கப்பட்ட குரங்கு, அமைதியாக பின்சீட்டில் அமர்ந்து அவருடன் வந்துள்ளது.பொலிஸாரிடம் குரங்கை ஒப்படைந்த அந்த நபர் குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் தான் பொலிஸில் ஒப்படைக்க வந்ததாக தெரிவித்துள்ளார்.பிடிப்பட்ட குரங்கை பொலிஸார் காட்டுப்பகுதியில் விடுமாறு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.ஆனால் அந்த குரங்கு, வனத்துறையினரின் பிடியிலிருந்து தப்பித்து விட்டதாக அதிகாரிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அக்குரங்கை இருசக்கர வாகனத்தில் ஏற்றிவரும் காணொளி  தற்போது சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement