கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் ஊடாக, 60 வயதைப் பூர்த்தி செய்த 170,950 விவசாயிகளுக்கு மாதாந்தம் ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, நாடளாவிய ரீதியில் உள்ள 3,975 தபாலகங்கள் ஊடாக மாதாந்தம் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஓய்வூதியமாகச் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய, 2024ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டம் கட்டமாகத் தேங்கிக் கிடந்த பெருமளவிலான விவசாய ஓய்வூதிய விண்ணப்பங்களுக்கான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, குறைபாடுகளற்ற விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள விவசாயிகளுக்கு ஒரு மாத காலத்திற்குள் ஓய்வூதியத்தை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், 2014 ஜனவரி 01ஆம் திகதி முதல் 60 வயதைப் பூர்த்தி செய்த விவசாயிகளுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலுவை ஓய்வூதியக் கொடுப்பனவுகளை மீள வழங்கும் வேலைத்திட்டத்தையும் தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
திறைசேரியினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டிற்கு அமைய, குறித்த நிலுவை ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.7 இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு மாதாந்த ஓய்வூதியம் – அரசாங்கம் நடவடிக்கை கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் ஊடாக, 60 வயதைப் பூர்த்தி செய்த 170,950 விவசாயிகளுக்கு மாதாந்தம் ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, நாடளாவிய ரீதியில் உள்ள 3,975 தபாலகங்கள் ஊடாக மாதாந்தம் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஓய்வூதியமாகச் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய, 2024ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டம் கட்டமாகத் தேங்கிக் கிடந்த பெருமளவிலான விவசாய ஓய்வூதிய விண்ணப்பங்களுக்கான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.இதன்படி, குறைபாடுகளற்ற விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள விவசாயிகளுக்கு ஒரு மாத காலத்திற்குள் ஓய்வூதியத்தை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதேவேளை, முறையாகத் தவணைப் பணத்தைச் செலுத்தாத மற்றும் 25 சதவீதத்திற்கும் அதிகமான தவணைப் பணத்தைச் செலுத்தியுள்ள பங்களிப்பாளர்களுக்கான நிகரத் தவணைப் பணத்தைக் (Net Installments) கணக்கிடும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மேலும், 2014 ஜனவரி 01ஆம் திகதி முதல் 60 வயதைப் பூர்த்தி செய்த விவசாயிகளுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலுவை ஓய்வூதியக் கொடுப்பனவுகளை மீள வழங்கும் வேலைத்திட்டத்தையும் தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.திறைசேரியினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டிற்கு அமைய, குறித்த நிலுவை ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.