எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மன்னார் பகுதியில் இன்று (17) நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகளை மூடப்பட வேண்டியிருந்தது.
தேசிய மக்கள் சக்தி இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து, மக்கள் தங்கள் பணிகளைச் சுதந்திரமாகச் செய்யக்கூடிய ஒரு நாட்டை உருவாக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
மேலும் மன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்துக்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த சேவைகள் முன்னெடுக்கப்படும். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போதும் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி கூறினார்.
அதேநேரம் மன்னாரில் காற்றைக் கொண்டு மின்னுற்பத்தி செய்யக்கூடிய வசதி அதிகம் காணப்படுகிறது.
ஆனால் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பு குறித்து கருத்தில் கொள்ளாமல் அவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவை அனைத்தும் தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் எதிர்காலத்தில் மக்களின் கருத்துகளை அறிந்து, சூழல் பாதிப்பு இல்லாமல் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு மன்னார் - இராமேஸ்வரம் படகு சேவை விரைவில் மன்னாரில் ஜனாதிபதி உறுதி எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.மன்னார் பகுதியில் இன்று (17) நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகளை மூடப்பட வேண்டியிருந்தது.தேசிய மக்கள் சக்தி இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து, மக்கள் தங்கள் பணிகளைச் சுதந்திரமாகச் செய்யக்கூடிய ஒரு நாட்டை உருவாக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.மேலும் மன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்துக்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த சேவைகள் முன்னெடுக்கப்படும். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போதும் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி கூறினார். அதேநேரம் மன்னாரில் காற்றைக் கொண்டு மின்னுற்பத்தி செய்யக்கூடிய வசதி அதிகம் காணப்படுகிறது. ஆனால் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பு குறித்து கருத்தில் கொள்ளாமல் அவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவை அனைத்தும் தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்காலத்தில் மக்களின் கருத்துகளை அறிந்து, சூழல் பாதிப்பு இல்லாமல் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.