• Feb 04 2025

சுதந்திர தின விழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்- 1,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கடமையில்!

Chithra / Feb 3rd 2025, 1:30 pm
image

  

77வது சுதந்திர தின விழா நாளை  காலை சுதந்திர சதுக்கம் மற்றும் சுதந்திர பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளன. இந்நிலையில் நாளை பாதுகாப்புக்காக 1,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று (03) காலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, அங்கு வருபவர்கள் பரிசோதிக்கப்பட்டு பின்னர் சுதந்திர தின விழாவிற்கு அனுப்பப்படுவார்கள், சுதந்திர தின விழாவில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

நாளை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

அனைத்து அழைப்பாளர்களும் காலை 7.00 மணிக்கு முன்னதாக உரிய இடங்களுக்கு சென்று தங்களது இருக்கைகளில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக வீதிப் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹப்புகொட தெரிவித்தார்.

இதற்கிடையில், சுதந்திர தின விழாவை காண வரும் பொதுமக்கள் பௌத்தலோக மாவத்தை வழியாக வந்து, பின்னர் ரூபவாஹினி வளாகத்திற்கு அருகில் சோதனை செய்யப்பட்டு ஆசனங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்- 1,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கடமையில்   77வது சுதந்திர தின விழா நாளை  காலை சுதந்திர சதுக்கம் மற்றும் சுதந்திர பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளன. இந்நிலையில் நாளை பாதுகாப்புக்காக 1,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இன்று (03) காலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.அதன்படி, அங்கு வருபவர்கள் பரிசோதிக்கப்பட்டு பின்னர் சுதந்திர தின விழாவிற்கு அனுப்பப்படுவார்கள், சுதந்திர தின விழாவில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.நாளை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.அனைத்து அழைப்பாளர்களும் காலை 7.00 மணிக்கு முன்னதாக உரிய இடங்களுக்கு சென்று தங்களது இருக்கைகளில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக வீதிப் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹப்புகொட தெரிவித்தார்.இதற்கிடையில், சுதந்திர தின விழாவை காண வரும் பொதுமக்கள் பௌத்தலோக மாவத்தை வழியாக வந்து, பின்னர் ரூபவாஹினி வளாகத்திற்கு அருகில் சோதனை செய்யப்பட்டு ஆசனங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement