• Jan 13 2025

கடந்த ஆண்டில் 2 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை..!

Sharmi / Jan 11th 2025, 9:44 am
image

கடந்த 2024 டிசம்பரில் 248,592 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்ததாகவும் 2024 இல் அதிக மாதாந்திர வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மொத்தம் 2,053,465 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை பதிவாகியுள்ளது. 

இது 2023 உடன் ஒப்பிடும்போது 38% அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.

இதன்மூலம் இலங்கை மத்திய வங்கி (CBSL) உல்லாசப் பயண வருமானம் 3,168.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இது கடந்த ஆண்டை விட கணிசமான 53.2% அதிகரிப்பாகும்.

இதேவேளை, ஜனவரி முதல் ஒன்பது நாட்களில் 70,944 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் 2 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை. கடந்த 2024 டிசம்பரில் 248,592 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்ததாகவும் 2024 இல் அதிக மாதாந்திர வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆண்டு மொத்தம் 2,053,465 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை பதிவாகியுள்ளது. இது 2023 உடன் ஒப்பிடும்போது 38% அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.இதன்மூலம் இலங்கை மத்திய வங்கி (CBSL) உல்லாசப் பயண வருமானம் 3,168.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.இது கடந்த ஆண்டை விட கணிசமான 53.2% அதிகரிப்பாகும்.இதேவேளை, ஜனவரி முதல் ஒன்பது நாட்களில் 70,944 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement