• Sep 20 2024

இலங்கையில் பாதுகாப்பற்ற முறையில் வாழும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் SamugamMedia

Chithra / Mar 8th 2023, 5:26 pm
image

Advertisement

இலங்கையில் பல்வேறு காரணங்களால் சுமார் 3,43,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பற்ற முறையில் வாழ்வதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. 

நாட்டிலுள்ள மொத்த சிறார்களின் 10 வீதமானோர் இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் வசிப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


பொருளாதார மற்றும் பல்வேறு சமூக காரணங்களால் சிறுவர்கள் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான சிறுவர்கள் பராமரிப்பு  இல்லங்களுக்கு செல்வதைத் தடுப்பதற்கும் வேறு மாற்று முறைகள் மூலம் அவர்களை பராமரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 


தேசிய மாற்று பாதுகாப்பு அமைப்பின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பாதுகாப்பற்ற முறையில் வாழும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் SamugamMedia இலங்கையில் பல்வேறு காரணங்களால் சுமார் 3,43,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பற்ற முறையில் வாழ்வதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள மொத்த சிறார்களின் 10 வீதமானோர் இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் வசிப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொருளாதார மற்றும் பல்வேறு சமூக காரணங்களால் சிறுவர்கள் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறான சிறுவர்கள் பராமரிப்பு  இல்லங்களுக்கு செல்வதைத் தடுப்பதற்கும் வேறு மாற்று முறைகள் மூலம் அவர்களை பராமரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய மாற்று பாதுகாப்பு அமைப்பின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement