• Sep 17 2024

அதிகமான பெண்கள் சாவை தெரிவு செய்வதற்கான களத்தையே அரசு இன்று உருவாக்கியுள்ளது – கொந்தளித்த ஹரினி SamugamMedia

Chithra / Mar 8th 2023, 5:30 pm
image

Advertisement

ஆயிரம் பெண்கள் ஒன்றுகூடி போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதன் மூலம் எவ்வாறு நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுமென தேசிய மக்கள் சக்தியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

பெண்ணியல் வாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பின்னர் கிடைக்கப்பெற்ற வெற்றியே இந்த மார்ச் 08 என்ற பெண்களுக்கான தினம் என்றும் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்த அமைதியான போராட்டத்தின் போது கூட பொலிசார் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையினை கட்டவித்து விட்டிருந்தாகவும் பெண்கள் மீது கண்ணீர்புகை குண்டு தாக்குதலை நடத்துவதற்கும் நீர்த்தாரை பிரயோகத்தை  மேற்கொள்வதற்கும் பொலிசார் முற்பட்டிருந்தாகவும் ஹரினி அமரசூரிய குற்றம் சுமத்தியிருந்தார்.

சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் தமது போராட்டத்தை அடக்குவதற்கு அனைத்து வழிமுறைகளை கையாளுமாறு உத்தரவிட்டிருந்தாகவும் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டிருந்தார்.

பால்நிலை சமத்துவத்தை பாதுகாப்பதற்கான சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் ஆனால் சட்டங்கள் அறைகளில் நடைமுறைக்கு வரமுடியாது என்றும் ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது வெளியில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதன் ஊடாகவே அது நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டிருந்தார்.

இந்த நாட்டிலுள்ள தாய்மார்கள் வாழ்வதை விடவும் சாவை அதிகம் தெரிவு செய்வதற்கான களத்தினையே அரசாங்கம் தற்போது உருவாக்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இவ்வாறான விடயங்கள் நகைப்புரிய விடயம் அல்ல என்றும் ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்திருந்தார்.

அதிகமான பெண்கள் சாவை தெரிவு செய்வதற்கான களத்தையே அரசு இன்று உருவாக்கியுள்ளது – கொந்தளித்த ஹரினி SamugamMedia ஆயிரம் பெண்கள் ஒன்றுகூடி போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதன் மூலம் எவ்வாறு நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுமென தேசிய மக்கள் சக்தியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.பெண்ணியல் வாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பின்னர் கிடைக்கப்பெற்ற வெற்றியே இந்த மார்ச் 08 என்ற பெண்களுக்கான தினம் என்றும் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்த அமைதியான போராட்டத்தின் போது கூட பொலிசார் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையினை கட்டவித்து விட்டிருந்தாகவும் பெண்கள் மீது கண்ணீர்புகை குண்டு தாக்குதலை நடத்துவதற்கும் நீர்த்தாரை பிரயோகத்தை  மேற்கொள்வதற்கும் பொலிசார் முற்பட்டிருந்தாகவும் ஹரினி அமரசூரிய குற்றம் சுமத்தியிருந்தார்.சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் தமது போராட்டத்தை அடக்குவதற்கு அனைத்து வழிமுறைகளை கையாளுமாறு உத்தரவிட்டிருந்தாகவும் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டிருந்தார்.பால்நிலை சமத்துவத்தை பாதுகாப்பதற்கான சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் ஆனால் சட்டங்கள் அறைகளில் நடைமுறைக்கு வரமுடியாது என்றும் ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.பொது வெளியில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதன் ஊடாகவே அது நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டிருந்தார்.இந்த நாட்டிலுள்ள தாய்மார்கள் வாழ்வதை விடவும் சாவை அதிகம் தெரிவு செய்வதற்கான களத்தினையே அரசாங்கம் தற்போது உருவாக்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.இவ்வாறான விடயங்கள் நகைப்புரிய விடயம் அல்ல என்றும் ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement