• Jul 14 2025

துறைமுகங்களில் சிக்கியிருக்கும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் - சிக்கலில் இறக்குமதியாளர்கள்

Chithra / Jul 14th 2025, 10:45 am
image



 

இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இன்னும் துறைமுகங்களில் சிக்கியிருப்பதாக  வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

அவற்றை விடுவிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அதற்கு உரிய பதிலும் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நடத்துமாறு கோரிய போதிலும், இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த வாகனங்களை விடுவிக்காமல் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் வைத்திருப்பதால், தாமத கட்டணங்களை இறக்குமதியாளர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் வேறொரு நாட்டிற்குச் சொந்தமானது என்பதால், செலுத்தப்படும் தாமதக் கட்டணங்கள் அந்த நாடுகளுக்கு டொலர்களில் மாற்றப்படுகின்றன .

கொழும்பு துறைமுகத்தில் உள்ள பெரும்பாலான வாகன நிறுத்துமிடங்களும் தனியார் துறையை சேர்ந்தவை என்பதால், அந்த தாமதக் கட்டணங்களும் அவர்களுக்கு செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறைமுகங்களில் சிக்கியிருக்கும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் - சிக்கலில் இறக்குமதியாளர்கள்  இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இன்னும் துறைமுகங்களில் சிக்கியிருப்பதாக  வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.அவற்றை விடுவிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அதற்கு உரிய பதிலும் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நடத்துமாறு கோரிய போதிலும், இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்த வாகனங்களை விடுவிக்காமல் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் வைத்திருப்பதால், தாமத கட்டணங்களை இறக்குமதியாளர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.ஹம்பாந்தோட்டை துறைமுகம் வேறொரு நாட்டிற்குச் சொந்தமானது என்பதால், செலுத்தப்படும் தாமதக் கட்டணங்கள் அந்த நாடுகளுக்கு டொலர்களில் மாற்றப்படுகின்றன .கொழும்பு துறைமுகத்தில் உள்ள பெரும்பாலான வாகன நிறுத்துமிடங்களும் தனியார் துறையை சேர்ந்தவை என்பதால், அந்த தாமதக் கட்டணங்களும் அவர்களுக்கு செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement