• May 20 2024

பிரபல பாடசாலையில் புலமைப்பரிசில் கௌரவிப்பு நிகழ்விற்கு மாணவர்களிடமிருந்து 9 லட்சத்திற்கு மேற்பட்ட நிதி அறவீடு! samugammedia

Tamil nila / Mar 29th 2023, 11:03 pm
image

Advertisement

வவுனியாவிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் புலமைப்பரிசில் கௌரவிப்பு நிகழ்விற்கு மாணவர்களிடமிருந்து 9லட்சத்திற்கு ரூபா அறவீடு செய்வதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இறுதியாக வெளியாகிய புலமைப்பரிசில் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு குறித்த ஆண்கள் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் 100க்கு மேல் புள்ளிகளை பெற்ற 192 மாணவர்களில் ஒருவரிடமிருந்து 5000 ரூபா பணமும் 100க்கு குறைவாக புள்ளிகளை பெற்ற 4 மாணவர்களிடமிருந்து 2500 ரூபா பணமும் கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒர் மாணவர்களிடம் 5000 ரூபா எனில் 192 மாணவர்களிடமிருந்து 9லட்சத்தி 60ஆயிரம் ரூபாய் பணமும் ஏனைய 4 மாணவர்களிடமிருந்து 2500ரூபாய் எனில் 10இ000 ரூபாய் பணம் என மொத்தமாக 9லட்சத்தி 70ரூபாய் மொத்தமாக கோரப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காகவே புலமைப்பரீட்சை திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும் புலமைப்பரீட்சையானது தற்போது பெற்றோர்கள் , பாடசாலைகளிடையே போட்டிப் பரீட்சையாக மாறியுள்ளது.

புலமைப்பரீட்சையில் மாணவர்கள் சித்தியேய்தியமைக்கு காரணமான ஆசிரியர்களுக்கு தங்க நகை அணிதல் போன்ற பல செயற்பாடுகளுக்கு பொருளாதார நெருக்கடியான நிலையில் பெற்றோர்களிடமிருந்து பெருமளவிலான நிதியினை கோருவது தொடர்பில் பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பணம் கோரப்படும் சமயத்தில் எம்மிடம் பணம் இல்லமையிலும் எனது பிள்ளையின் கௌரவம் மாத்திரம் பாடசாலை மட்டத்திலுள்ள பிள்ளையின் பிரிவினை காண்பது போன்ற விடயம் மற்றும் பெயர்களை வெளியிட்டு இவ் மாணவர்கள் பணம் தரவில்லை என வெளிப்படையான தெரிவிப்பமையினால் நாம் கடன் பெற்று பணம் வழங்கியுள்ளோம் என பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் வினாவிய போது,

இவ் கௌரவிப்பு தொடர்பான கலந்துரையாடல் பாடசாலையில் இடம்பெற்றிருந்ததாகவும் இது பெற்றோர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற தீர்மானம் எனவும் தெரிவித்திருந்தார்.

எனினும் பாடசாலை வளாகத்தில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் பாடசாலை நிர்வாகவும் பொறுப்பு கூறவேண்டிய கடமையுள்ளது என்பதுடன் பாடசாலையில் அதிகளவில் நிதி பெறப்படுப்படுவது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் அசமந்த போக்காகவுள்ளது என்பது தெளிவாகின்றது.

மேலும் நகரப்பகுதியிலுள்ள சில பாடசாலைகளில் பெற்றோர்களிடமிருந்து பணம் பெறப்பட்டு ஆசிரியர்களுக்கு தங்கம் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  

பிரபல பாடசாலையில் புலமைப்பரிசில் கௌரவிப்பு நிகழ்விற்கு மாணவர்களிடமிருந்து 9 லட்சத்திற்கு மேற்பட்ட நிதி அறவீடு samugammedia வவுனியாவிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் புலமைப்பரிசில் கௌரவிப்பு நிகழ்விற்கு மாணவர்களிடமிருந்து 9லட்சத்திற்கு ரூபா அறவீடு செய்வதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இறுதியாக வெளியாகிய புலமைப்பரிசில் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு குறித்த ஆண்கள் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் 100க்கு மேல் புள்ளிகளை பெற்ற 192 மாணவர்களில் ஒருவரிடமிருந்து 5000 ரூபா பணமும் 100க்கு குறைவாக புள்ளிகளை பெற்ற 4 மாணவர்களிடமிருந்து 2500 ரூபா பணமும் கோரப்பட்டுள்ளது.குறிப்பாக ஒர் மாணவர்களிடம் 5000 ரூபா எனில் 192 மாணவர்களிடமிருந்து 9லட்சத்தி 60ஆயிரம் ரூபாய் பணமும் ஏனைய 4 மாணவர்களிடமிருந்து 2500ரூபாய் எனில் 10இ000 ரூபாய் பணம் என மொத்தமாக 9லட்சத்தி 70ரூபாய் மொத்தமாக கோரப்பட்டுள்ளது.அரசாங்கத்தினால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காகவே புலமைப்பரீட்சை திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும் புலமைப்பரீட்சையானது தற்போது பெற்றோர்கள் , பாடசாலைகளிடையே போட்டிப் பரீட்சையாக மாறியுள்ளது.புலமைப்பரீட்சையில் மாணவர்கள் சித்தியேய்தியமைக்கு காரணமான ஆசிரியர்களுக்கு தங்க நகை அணிதல் போன்ற பல செயற்பாடுகளுக்கு பொருளாதார நெருக்கடியான நிலையில் பெற்றோர்களிடமிருந்து பெருமளவிலான நிதியினை கோருவது தொடர்பில் பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.பணம் கோரப்படும் சமயத்தில் எம்மிடம் பணம் இல்லமையிலும் எனது பிள்ளையின் கௌரவம் மாத்திரம் பாடசாலை மட்டத்திலுள்ள பிள்ளையின் பிரிவினை காண்பது போன்ற விடயம் மற்றும் பெயர்களை வெளியிட்டு இவ் மாணவர்கள் பணம் தரவில்லை என வெளிப்படையான தெரிவிப்பமையினால் நாம் கடன் பெற்று பணம் வழங்கியுள்ளோம் என பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.இவ்விடயம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் வினாவிய போது,இவ் கௌரவிப்பு தொடர்பான கலந்துரையாடல் பாடசாலையில் இடம்பெற்றிருந்ததாகவும் இது பெற்றோர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற தீர்மானம் எனவும் தெரிவித்திருந்தார்.எனினும் பாடசாலை வளாகத்தில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் பாடசாலை நிர்வாகவும் பொறுப்பு கூறவேண்டிய கடமையுள்ளது என்பதுடன் பாடசாலையில் அதிகளவில் நிதி பெறப்படுப்படுவது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் அசமந்த போக்காகவுள்ளது என்பது தெளிவாகின்றது.மேலும் நகரப்பகுதியிலுள்ள சில பாடசாலைகளில் பெற்றோர்களிடமிருந்து பணம் பெறப்பட்டு ஆசிரியர்களுக்கு தங்கம் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement