• May 17 2024

தேசிய சொத்துக்களை விற்பனை செய்ய இலங்கையின் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு! ஆய்வில் தகவல்

Chithra / Dec 15th 2022, 9:42 am
image

Advertisement

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு இலங்கையின் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பை வெளியிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

யுஎஸ்எய்ட் நிறுவனத்துடன் இணைந்து பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட தலைமையிலான சமூக ஆய்வாளர்கள் ஆய்வொன்றை நடத்தியுள்ளனர்.

இந்த ஆய்விலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. 

அதில் மேலும், 93.8 வீத இளைய தலைமுறையினரும், 93.2 வீத வயதானவர்களும் தேசிய சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை என்பது தெரியவந்துள்ளது.

42.1 வீத இளைஞர்களும், 47.4 வீத வயதானவர்களும் மட்டுமே அரசுத் துறைக்கு ஆட்களை சேர்ப்பது குறைக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

இலங்கையில் போருக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்காலத்தில் நாட்டிற்குச் சில நன்மைகளை ஏற்படுத்தும் என 69.1 வீத இளைஞர்களும் 69.4 வீத முதியவர்களும் நம்புகின்றனர்.

இதற்கிடையில், 76.6 வீத இளைஞர்களும், 71.9 வீத வயதானவர்களும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று விரும்புகின்றனர் என்று குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தேசிய சொத்துக்களை விற்பனை செய்ய இலங்கையின் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு ஆய்வில் தகவல் நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு இலங்கையின் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பை வெளியிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.யுஎஸ்எய்ட் நிறுவனத்துடன் இணைந்து பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட தலைமையிலான சமூக ஆய்வாளர்கள் ஆய்வொன்றை நடத்தியுள்ளனர்.இந்த ஆய்விலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. அதில் மேலும், 93.8 வீத இளைய தலைமுறையினரும், 93.2 வீத வயதானவர்களும் தேசிய சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை என்பது தெரியவந்துள்ளது.42.1 வீத இளைஞர்களும், 47.4 வீத வயதானவர்களும் மட்டுமே அரசுத் துறைக்கு ஆட்களை சேர்ப்பது குறைக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.இலங்கையில் போருக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்காலத்தில் நாட்டிற்குச் சில நன்மைகளை ஏற்படுத்தும் என 69.1 வீத இளைஞர்களும் 69.4 வீத முதியவர்களும் நம்புகின்றனர்.இதற்கிடையில், 76.6 வீத இளைஞர்களும், 71.9 வீத வயதானவர்களும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று விரும்புகின்றனர் என்று குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement