• May 04 2024

கொரோனாத் தொற்று குறித்து இனி அச்சமடைய தேவையில்லை - உலக சுகாதார அமைப்பு

Chithra / Dec 15th 2022, 9:39 am
image

Advertisement

கொவிட் -19 தொற்றுநோய் இனி அடுத்த ஆண்டில் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் 2020 ஆம் ஆண்டில் பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனப்படுத்தப்பட்டது.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானை மையமாகக் கொண்டு, 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த வைரஸ் தோற்றியதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக மாறியது.

இருப்பினும், கொவிட்-19 சீனாவுக்கு இன்னும் தலையிடியாக உள்ளது.

அதனை கட்டுப்படுத்த சீனா விதித்துள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகள் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தளர்த்தப்பட்டு மற்றும் நீக்கப்பட்டு உள்ளன.

இதன்படி, வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை என சீன சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், உலகின் பிற பகுதிகளில் இந்த நிலைமை முற்றிலும் வேறுபட்டது என்றும், வெற்றிகரமான தடுப்பூசி செலுத்துகை ஊடாக கொவிட் -19 வைரஸின் தீவிரம் குறைக்கப்பட்டதன் மூலம், வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறினார்.

கொரோனாத் தொற்று குறித்து இனி அச்சமடைய தேவையில்லை - உலக சுகாதார அமைப்பு கொவிட் -19 தொற்றுநோய் இனி அடுத்த ஆண்டில் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.கொவிட்-19 வைரஸ் 2020 ஆம் ஆண்டில் பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனப்படுத்தப்பட்டது.சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானை மையமாகக் கொண்டு, 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த வைரஸ் தோற்றியதாக கருதப்படுகிறது.இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக மாறியது.இருப்பினும், கொவிட்-19 சீனாவுக்கு இன்னும் தலையிடியாக உள்ளது.அதனை கட்டுப்படுத்த சீனா விதித்துள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகள் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தளர்த்தப்பட்டு மற்றும் நீக்கப்பட்டு உள்ளன.இதன்படி, வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை என சீன சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.எவ்வாறாயினும், உலகின் பிற பகுதிகளில் இந்த நிலைமை முற்றிலும் வேறுபட்டது என்றும், வெற்றிகரமான தடுப்பூசி செலுத்துகை ஊடாக கொவிட் -19 வைரஸின் தீவிரம் குறைக்கப்பட்டதன் மூலம், வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement