இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் பொலன்னறுவை பொலிஸ் பிரிவின் வளேகட ஓனேகம வீதியின் 09 வது மைல் கல்லுக்கு அருகில் நேற்று புதன்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 43 வயதுடைய நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
ஓனேகம பகுதியில் இருந்து வளேகட பகுதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இரண்டு மோட்டார் சைக்கிள் சாரதிகளும் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருடைய சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் - ஒருவர் உயிரிழப்பு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் பொலன்னறுவை பொலிஸ் பிரிவின் வளேகட ஓனேகம வீதியின் 09 வது மைல் கல்லுக்கு அருகில் நேற்று புதன்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. பொலன்னறுவை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 43 வயதுடைய நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.ஓனேகம பகுதியில் இருந்து வளேகட பகுதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இரண்டு மோட்டார் சைக்கிள் சாரதிகளும் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருடைய சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.