• Dec 27 2024

யாழில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்; தம்பதியினர் படுகாயம்..!

Sharmi / Dec 24th 2024, 5:52 pm
image

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனும் மனைவியும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

அராலி பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் சண்டிலிப்பாய் சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவ்வீதியால் வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது. 

இதன்போது இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதி மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இச் சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்; தம்பதியினர் படுகாயம். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனும் மனைவியும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,அராலி பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் சண்டிலிப்பாய் சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவ்வீதியால் வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது. இதன்போது இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதி மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement