• Oct 30 2024

அரசாங்கத்தில் இருந்து வெளியேறப்போவதாக மொட்டு எம்.பி அறிவிப்பு ! samugammedia

Tamil nila / May 20th 2023, 5:31 pm
image

Advertisement

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற சமுர்த்தி வேலைத்திட்டம் இல்லாதொழிக்கப்படுமானால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது நிச்சயம் உறுதி  என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத ;குமார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வறியவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே சமுர்த்தி வேலைத்திட்டம் உள்ளது. 

அதனை இல்லாது செய்வதற்கு இடமளிக்கப்படக்கூடாது. 

அதற்கு நான் எதிர்ப்பை வெளியிடுவேன்.இது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினேன். 

சமுர்த்தி வேலைத்திட்டம் இல்லாதொழிக்கப்படமாட்டாது, சமுர்த்தி அதிகாரிகளின் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படாது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இந்த உறுதிமொழி மீறப்படுமானால் நான் அரசில் இருந்து நிச்சயம் வெளியேறுவேன்.

சமுர்த்தி வேலைத்திட்டத்தில் உள்ள குறைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.  அவ்வாறான திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறப்போவதாக மொட்டு எம்.பி அறிவிப்பு samugammedia அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற சமுர்த்தி வேலைத்திட்டம் இல்லாதொழிக்கப்படுமானால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது நிச்சயம் உறுதி  என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத ;குமார எச்சரிக்கை விடுத்துள்ளார்.வறியவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே சமுர்த்தி வேலைத்திட்டம் உள்ளது. அதனை இல்லாது செய்வதற்கு இடமளிக்கப்படக்கூடாது. அதற்கு நான் எதிர்ப்பை வெளியிடுவேன்.இது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினேன். சமுர்த்தி வேலைத்திட்டம் இல்லாதொழிக்கப்படமாட்டாது, சமுர்த்தி அதிகாரிகளின் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படாது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.இந்த உறுதிமொழி மீறப்படுமானால் நான் அரசில் இருந்து நிச்சயம் வெளியேறுவேன்.சமுர்த்தி வேலைத்திட்டத்தில் உள்ள குறைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.  அவ்வாறான திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்.

Advertisement

Advertisement

Advertisement