இலங்கையில் வாட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவல் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும், இணைய குற்றவாளிகள் verification codes மூலம் மக்களின் கணக்குகளை அணுகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாட்ஸ்அப் பயனர்கள் எதிர்பாராதவிதமாக verification codeகளை பெறுவதும், சைபர் குற்றவாளிகள் தொடர்புடைய codeகளை பெறுவதற்கு நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் போல் பாவனை செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது.
verification codes மூலம் பயனரின் வாட்ஸ்அப் கணக்குகளை பெறுவதற்கு மோசடி செய்பவர்கள் வேலை செய்து வருவதாகவும், உங்கள் கணக்கிற்கு பணம் அனுப்ப தயாராக இருப்பதாகவும், அந்த codeகள் கையடக்கதொலைபேசிக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், Zoom ஊடாக பங்குபற்றுவதற்கான codeகள் உள்ளிடுமாறு வெளிநாட்டவர்களிடம் இருந்து பெறப்படும் செய்திகளுக்கு பதிலளிப்பதன் மூலம் இலங்கையர்கள் இந்த மோசடிகளில் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இது தொடர்பில் பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஹேக் செய்யப்படும் வாட்ஸ்அப் கணக்குகள் - மக்களுக்கு எச்சரிக்கை இலங்கையில் வாட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவல் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, இலங்கையில் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும், இணைய குற்றவாளிகள் verification codes மூலம் மக்களின் கணக்குகளை அணுகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.வாட்ஸ்அப் பயனர்கள் எதிர்பாராதவிதமாக verification codeகளை பெறுவதும், சைபர் குற்றவாளிகள் தொடர்புடைய codeகளை பெறுவதற்கு நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் போல் பாவனை செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது.verification codes மூலம் பயனரின் வாட்ஸ்அப் கணக்குகளை பெறுவதற்கு மோசடி செய்பவர்கள் வேலை செய்து வருவதாகவும், உங்கள் கணக்கிற்கு பணம் அனுப்ப தயாராக இருப்பதாகவும், அந்த codeகள் கையடக்கதொலைபேசிக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.மேலும், Zoom ஊடாக பங்குபற்றுவதற்கான codeகள் உள்ளிடுமாறு வெளிநாட்டவர்களிடம் இருந்து பெறப்படும் செய்திகளுக்கு பதிலளிப்பதன் மூலம் இலங்கையர்கள் இந்த மோசடிகளில் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.எனவே, இது தொடர்பில் பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.