• Apr 27 2025

மொட்டுக் கட்சியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர்: விரைவில் அறிவிப்போம்- சாகர

Sharmi / Mar 11th 2025, 8:26 am
image

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் யார் என்பதை ஓரிரு நாட்களில் அறிவிப்போம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். 

அதேவேளை, வர்த்தக நகர் கொழும்பிற்கான மேயர் வேட்பாளர் என்பவர் சாதாரணமானவராக இருக்க முடியாது.

அதற்கமைய மிகப் பொருத்தமான ஒருவரை நாம் களமிறக்குவோம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(10) உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம்.

இலங்கையின் தலைநகரான வர்த்தக நகர் கொழும்பிற்கான மேயர் வேட்பாளர் என்பவர் சாதாரணமானவராக இருக்க முடியாது.

எனவே, முகாமைவத்துவம், வர்த்தகம் என சகல துறைகளிலும் தேர்ச்சி பெற்ற சிரேஷ்ட பிரஜையொருவரையே நாம் மேயர் வேட்பாளராகக் களமிறக்குவோம்.

சமல் ராஜபக்ஷ தேர்தலில் களமிறங்குவதற்கு முன்வந்தால் அவரது கோரிக்கையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வோம்.

எவ்வாறிருப்பினும் அவர் இது தொடர்பில் கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

வர்த்தக நகரான கொழும்பை மையமாகக் கொண்டே முழு நாடும் இயங்குகிறது. அவ்வாறிருக்கையில் அதனை நிர்வாகம் செய்யக் கூடிய மேயர் அந்தளவு பலம் பொருந்தியவராக இருக்க வேண்டும்.

ஓரிரு நாட்களில் அது தொடர்பில் அறிவிப்போம். இவ்விடயத்தில் கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை.

கடந்த தேர்தல்களில் மக்கள் பாரிய நம்பிக்கையுடன் இந்த அரசாங்கத்திடம் ஆட்சியைக் கையளித்தனர்.

ஆனால் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவில்லை. இதனால் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது கோபம் கொண்டுள்ளனர்.

அதற்கு உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் மூலம் பதிலளிக்கவும் மக்கள் தயாராகிவிட்டனர். உகண்டாவிலிருந்து டொலர்களை மீட்பதாகக் கூறினார்கள்.

ஆனால் நாட்டிலிருந்து சட்ட விரோதமாக ஒரு டொலர் கூட வெளியாகியதற்கான ஆதரத்தைக் கூட இவர்களால் திரட்ட முடியவில்லை. 

எனவே தேசிய மக்கள் சக்தி கூறிய அனைத்தும் பொய் என்பது தெரியவந்துள்ளது என்றார்.


மொட்டுக் கட்சியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர்: விரைவில் அறிவிப்போம்- சாகர பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் யார் என்பதை ஓரிரு நாட்களில் அறிவிப்போம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அதேவேளை, வர்த்தக நகர் கொழும்பிற்கான மேயர் வேட்பாளர் என்பவர் சாதாரணமானவராக இருக்க முடியாது.அதற்கமைய மிகப் பொருத்தமான ஒருவரை நாம் களமிறக்குவோம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(10) உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம்.இலங்கையின் தலைநகரான வர்த்தக நகர் கொழும்பிற்கான மேயர் வேட்பாளர் என்பவர் சாதாரணமானவராக இருக்க முடியாது.எனவே, முகாமைவத்துவம், வர்த்தகம் என சகல துறைகளிலும் தேர்ச்சி பெற்ற சிரேஷ்ட பிரஜையொருவரையே நாம் மேயர் வேட்பாளராகக் களமிறக்குவோம்.சமல் ராஜபக்ஷ தேர்தலில் களமிறங்குவதற்கு முன்வந்தால் அவரது கோரிக்கையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வோம்.எவ்வாறிருப்பினும் அவர் இது தொடர்பில் கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.வர்த்தக நகரான கொழும்பை மையமாகக் கொண்டே முழு நாடும் இயங்குகிறது. அவ்வாறிருக்கையில் அதனை நிர்வாகம் செய்யக் கூடிய மேயர் அந்தளவு பலம் பொருந்தியவராக இருக்க வேண்டும்.ஓரிரு நாட்களில் அது தொடர்பில் அறிவிப்போம். இவ்விடயத்தில் கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை.கடந்த தேர்தல்களில் மக்கள் பாரிய நம்பிக்கையுடன் இந்த அரசாங்கத்திடம் ஆட்சியைக் கையளித்தனர்.ஆனால் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவில்லை. இதனால் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது கோபம் கொண்டுள்ளனர்.அதற்கு உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் மூலம் பதிலளிக்கவும் மக்கள் தயாராகிவிட்டனர். உகண்டாவிலிருந்து டொலர்களை மீட்பதாகக் கூறினார்கள்.ஆனால் நாட்டிலிருந்து சட்ட விரோதமாக ஒரு டொலர் கூட வெளியாகியதற்கான ஆதரத்தைக் கூட இவர்களால் திரட்ட முடியவில்லை. எனவே தேசிய மக்கள் சக்தி கூறிய அனைத்தும் பொய் என்பது தெரியவந்துள்ளது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement