தேர்தல் காலத்தில் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது சட்டவிரோதமானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 41 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. தேர்தல் காலத்திலேயே பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரச சேவையாளர்கள் தேர்தல் காலத்தில் இடமாற்றம் செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. அவசியமானால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி பெற்று இடமாற்றம் செய்ய வேண்டும்.
இந்த நடவடிக்கை ஊடாக தேர்தல் பெறுபேறுகளில் அரசாங்கத்தினால் ஆதிக்கம் செலுத்துவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
அவ்வாறெனில் தேர்தல் காலத்தில் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது சட்டத்திற்குப் புறம்பானது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி இடமாற்றம் செய்யப்படுவார்களாயின் இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது சட்டவிரோதம் - கம்மன்பில குற்றச்சாட்டு தேர்தல் காலத்தில் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது சட்டவிரோதமானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 41 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. தேர்தல் காலத்திலேயே பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரச சேவையாளர்கள் தேர்தல் காலத்தில் இடமாற்றம் செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. அவசியமானால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி பெற்று இடமாற்றம் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை ஊடாக தேர்தல் பெறுபேறுகளில் அரசாங்கத்தினால் ஆதிக்கம் செலுத்துவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. அவ்வாறெனில் தேர்தல் காலத்தில் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது சட்டத்திற்குப் புறம்பானது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி இடமாற்றம் செய்யப்படுவார்களாயின் இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.