அரசாங்கத்தின் பெருந்தொகையான உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்தல் வெற்றி நிச்சயம் என்றால் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி பல்வேறு தடைகளை ஏற்படுத்துவது ஏன் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தொண்ணூற்று இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்த போதிலும், இந்த சந்திப்பு ஒரு குழுவாகவே ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின் போது சில எம்.பி.க்கள் எழுந்து சென்று விட்டதாக தெரிவிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஒட்டுமொத்த குழுவும் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதிப்படுத்த முடியாது.
எம்.பி.க்கள் மாறினாலும் எம்.பி.க்களின் எண்ணிக்கையானது ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், எம்.பி.க்களின் நடவடிக்கைகள் மற்றும் மக்களை எவ்வாறு கையாள்கின்றனர் என்பதன் அடிப்படையிலேயே மக்கள் தீர்மானங்களை மேற்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மொட்டு சின்னம் எனவும், கட்சியில் அவருக்கு இன்னும் அதிக மரியாதை இருக்கின்றது.
எனவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானம் மொட்டு கட்சியில் உள்ள அடிமட்டக் கட்சியின் தீர்மானத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தினார்.
ரணிலுக்கு மொட்டுக் கட்சி எம்.பிகள் ஆதரவு ஜீ.எல்.பீரிஸ் மறுப்பு. அரசாங்கத்தின் பெருந்தொகையான உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்தல் வெற்றி நிச்சயம் என்றால் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி பல்வேறு தடைகளை ஏற்படுத்துவது ஏன் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.பொதுஜன பெரமுனவின் தொண்ணூற்று இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்த போதிலும், இந்த சந்திப்பு ஒரு குழுவாகவே ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் போது சில எம்.பி.க்கள் எழுந்து சென்று விட்டதாக தெரிவிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே ஒட்டுமொத்த குழுவும் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதிப்படுத்த முடியாது.எம்.பி.க்கள் மாறினாலும் எம்.பி.க்களின் எண்ணிக்கையானது ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், எம்.பி.க்களின் நடவடிக்கைகள் மற்றும் மக்களை எவ்வாறு கையாள்கின்றனர் என்பதன் அடிப்படையிலேயே மக்கள் தீர்மானங்களை மேற்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மொட்டு சின்னம் எனவும், கட்சியில் அவருக்கு இன்னும் அதிக மரியாதை இருக்கின்றது.எனவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானம் மொட்டு கட்சியில் உள்ள அடிமட்டக் கட்சியின் தீர்மானத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தினார்.