• Nov 24 2024

ஜனநாயக தேசியக் கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு..!

Sharmi / Oct 8th 2024, 7:41 pm
image

"ஒரு புரட்சியின் ஆரம்பம்" எனும் தேர்தல் தொனிப்பொருளில் "ஜனநாயக தேசியக் கூட்டணி"யின் அங்குரார்ப்பண நிகழ்வும், புதிய கூட்டணி கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து நிகழ்வும் இன்றைய தினம்(08) கொழும்பில் கட்சியின் தலைவர் பிரபாக கணேசன் தலைமையில் கட்சியின் தவிசாளர் தொழிலதிபர் முகாம் பெரேரா மற்றும் உப தலைவர் வி ஜே மு தமித் லொக்கு பண்டார மற்றும் பொதுச் செயலாளர் சுரேஷ் கங்காதரன் ஆகியோரின் பங்களிப்பில் ஏராளமான கட்சி அங்கத்தவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை விரைவாக அடையும் வகையில், இந்த அரசியல் கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கின்றதோடு, ஜனரஞ்சக விளக்க முறைமையின் மூலம் அனைவருக்கும் சம வாய்ப்புகளை உருவாக்குதல், கல்விக்கு முன்னுரிமை மற்றும் இலவசத்தை உயர்த்துதல், மக்களின் ஆரோக்கியம் போன்ற‌ கொள்கைகளுடன் பயணிக்கும் இந்த கூட்டணியானது எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கு முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வேட்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஜனநாயக தேசியக் கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு. "ஒரு புரட்சியின் ஆரம்பம்" எனும் தேர்தல் தொனிப்பொருளில் "ஜனநாயக தேசியக் கூட்டணி"யின் அங்குரார்ப்பண நிகழ்வும், புதிய கூட்டணி கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து நிகழ்வும் இன்றைய தினம்(08) கொழும்பில் கட்சியின் தலைவர் பிரபாக கணேசன் தலைமையில் கட்சியின் தவிசாளர் தொழிலதிபர் முகாம் பெரேரா மற்றும் உப தலைவர் வி ஜே மு தமித் லொக்கு பண்டார மற்றும் பொதுச் செயலாளர் சுரேஷ் கங்காதரன் ஆகியோரின் பங்களிப்பில் ஏராளமான கட்சி அங்கத்தவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை விரைவாக அடையும் வகையில், இந்த அரசியல் கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கின்றதோடு, ஜனரஞ்சக விளக்க முறைமையின் மூலம் அனைவருக்கும் சம வாய்ப்புகளை உருவாக்குதல், கல்விக்கு முன்னுரிமை மற்றும் இலவசத்தை உயர்த்துதல், மக்களின் ஆரோக்கியம் போன்ற‌ கொள்கைகளுடன் பயணிக்கும் இந்த கூட்டணியானது எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கு முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வேட்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement