• May 17 2024

முல்லை நீதிபதி விவகாரம்...! நீதித்துறைக்குச் சாவு மணி அடிப்பு...! தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்வு என்பது கானல் நீரே...! சபையில் சிறீதரன் எம்.பி சீற்றம்...!samugammedia

Sharmi / Oct 4th 2023, 10:13 am
image

Advertisement

விடுக்கப்பட்ட கட்டளையை மீளப்பெறுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்குச் சட்டமா அதிபர் அழுத்தம் பிரயோகித்துள்ளார். இந்த நாட்டில் நீதித்துறைக்குச் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சுயாதீனமாகச் செயற்பட முடியாத நிலையில் எவ்வாறு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்? இதனால்தான் சர்வதேச விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாகப் பதவி துறந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்குக் காரணமாக இருந்த ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்களின் இனவாதக் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் பேரினவாத அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாட்டின் நீதித்துறை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை இந்தச் சம்பவம் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. நாட்டின் நீதித்துறை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

2005, 2006 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் இராணுவ வாகனத்தின் ஊடாகக் கொலை செய்யும் முயற்சி எடுக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க வலுக்கட்டாயமான முறையில் பதவிநீக்கப்பட்டார். இந்த நாட்டில் நீதி இல்லை என்பதற்குப் பல விடயங்கள் சான்று
பகர்கின்றன. படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராசசிங்கம் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.

திருகோணமலையில் கொல்லப்பட்ட 5 மாணவர்களுக்கும், கொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டு நிறுவனத் தொண்டர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை.

வழங்கிய கட்டளையை மீளப்பெறுமாறு சட்டமா அதிபர் விடுத்த அழுத்தத்தால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறந்துநாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த நாட்டில் தொடர்ந்து சுயாதீனமாகச்
செயற்பட முடியாது என்பதை நீதிபதி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். சிங்களப் பேரினவாதக் கொள்கையில் இருந்து விடுபட்டு அரச தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத்தீர்வு வழங்குவார்கள் என்பது கானல் நீராகவே காணப்படுகின்றது.

முல்லைத்தீவு நீதிபதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு நீதி கோரி கிளிநொச்சி பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின்
செயலாளர் நாயகத்துக்கு மகஜர் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்கள்.

குருந்தூர் மலையில் உள்ள சிவன் ஆலயத்தை இடித்தழித்து அங்கு பௌத்த விகாரை கட்டும்போது கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்தபோது பௌத்த பேரினவாதக் கொள்கையுடையவர்கள்,பௌத்த பிக்குகளை ஒன்றுதிரட்டி படைபட்டாளத்துடன் ஒன்றிணைந்து குருந்தூர்மலையில் பௌத்த விகாரையைக் கட்டிமுடித்துள்ளார்கள். இது நீதிமன்றத்தை அலட்சியப்படுத்தும் செயற்பாடாகும்.

திருகோணமலையில் அரிசிமலைப்பகுதியில் கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரையைப் புறக்கணித்துப் பலவந்தமான முறையில் பௌத்த விகாரை கட்டப்படுகின்றது. இந்த நாட்டில் நீதி எங்குள்ளது? நாட்டின் நீதித்துறைக்குச் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. அரசின் செயற்பாடுகளை விமர்சிக்கும் மக்களை
முடக்கவே அரசு முயற்சிக்கின்றது.

எவ்வகையான அடக்குமுறையைக் கொண்டு வரலாம் என்றே அரச தலைவர்கள் சிந்திக்கின்றார்கள்.இந்த நாடு முன்னேற்றமடைவதற்கு எந்தச் சாத்தியமும் கிடையாது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை விவகாரம், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதால் நீதிபதி சரவணராஜா பாரிய நெருக்கடிக்
குள்ளானார். தமிழ் நீதிபதி நீதி வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பேரினவாதக் கருத்தை வெளியிட்டார்.

இலங்கையில் நீதித்துறை இறந்துள்ளது. இந்த நாட்டிலா இன நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கப் போகின்றது. இதனால்தான் நாங்கள் தொடர்ந்தும் சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம். தீர்வுத் திட்டங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட அறிக்கைகள்,திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சகல இனங்களையும் ஒன்றிணைத்து இந்த நாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளுக்குச் சர்வதேச விசாரணை ஊடாகத் தீர்வு கோருகின்றோம்  எனவும் தெரிவித்தார்.

முல்லை நீதிபதி விவகாரம். நீதித்துறைக்குச் சாவு மணி அடிப்பு. தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்வு என்பது கானல் நீரே. சபையில் சிறீதரன் எம்.பி சீற்றம்.samugammedia விடுக்கப்பட்ட கட்டளையை மீளப்பெறுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்குச் சட்டமா அதிபர் அழுத்தம் பிரயோகித்துள்ளார். இந்த நாட்டில் நீதித்துறைக்குச் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சுயாதீனமாகச் செயற்பட முடியாத நிலையில் எவ்வாறு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் இதனால்தான் சர்வதேச விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாகப் பதவி துறந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்குக் காரணமாக இருந்த ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்களின் இனவாதக் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் பேரினவாத அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நாட்டின் நீதித்துறை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை இந்தச் சம்பவம் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. நாட்டின் நீதித்துறை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 2005, 2006 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் இராணுவ வாகனத்தின் ஊடாகக் கொலை செய்யும் முயற்சி எடுக்கப்பட்டது.2010 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க வலுக்கட்டாயமான முறையில் பதவிநீக்கப்பட்டார். இந்த நாட்டில் நீதி இல்லை என்பதற்குப் பல விடயங்கள் சான்றுபகர்கின்றன. படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராசசிங்கம் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.திருகோணமலையில் கொல்லப்பட்ட 5 மாணவர்களுக்கும், கொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டு நிறுவனத் தொண்டர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை.வழங்கிய கட்டளையை மீளப்பெறுமாறு சட்டமா அதிபர் விடுத்த அழுத்தத்தால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறந்துநாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த நாட்டில் தொடர்ந்து சுயாதீனமாகச்செயற்பட முடியாது என்பதை நீதிபதி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். சிங்களப் பேரினவாதக் கொள்கையில் இருந்து விடுபட்டு அரச தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத்தீர்வு வழங்குவார்கள் என்பது கானல் நீராகவே காணப்படுகின்றது.முல்லைத்தீவு நீதிபதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு நீதி கோரி கிளிநொச்சி பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின்செயலாளர் நாயகத்துக்கு மகஜர் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்கள்.குருந்தூர் மலையில் உள்ள சிவன் ஆலயத்தை இடித்தழித்து அங்கு பௌத்த விகாரை கட்டும்போது கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்தபோது பௌத்த பேரினவாதக் கொள்கையுடையவர்கள்,பௌத்த பிக்குகளை ஒன்றுதிரட்டி படைபட்டாளத்துடன் ஒன்றிணைந்து குருந்தூர்மலையில் பௌத்த விகாரையைக் கட்டிமுடித்துள்ளார்கள். இது நீதிமன்றத்தை அலட்சியப்படுத்தும் செயற்பாடாகும்.திருகோணமலையில் அரிசிமலைப்பகுதியில் கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரையைப் புறக்கணித்துப் பலவந்தமான முறையில் பௌத்த விகாரை கட்டப்படுகின்றது. இந்த நாட்டில் நீதி எங்குள்ளது நாட்டின் நீதித்துறைக்குச் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. அரசின் செயற்பாடுகளை விமர்சிக்கும் மக்களைமுடக்கவே அரசு முயற்சிக்கின்றது.எவ்வகையான அடக்குமுறையைக் கொண்டு வரலாம் என்றே அரச தலைவர்கள் சிந்திக்கின்றார்கள்.இந்த நாடு முன்னேற்றமடைவதற்கு எந்தச் சாத்தியமும் கிடையாது.முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை விவகாரம், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதால் நீதிபதி சரவணராஜா பாரிய நெருக்கடிக்குள்ளானார். தமிழ் நீதிபதி நீதி வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பேரினவாதக் கருத்தை வெளியிட்டார்.இலங்கையில் நீதித்துறை இறந்துள்ளது. இந்த நாட்டிலா இன நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கப் போகின்றது. இதனால்தான் நாங்கள் தொடர்ந்தும் சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம். தீர்வுத் திட்டங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட அறிக்கைகள்,திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சகல இனங்களையும் ஒன்றிணைத்து இந்த நாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளுக்குச் சர்வதேச விசாரணை ஊடாகத் தீர்வு கோருகின்றோம்  எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement