• Jan 13 2025

முல்லை ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்..!

Sharmi / Dec 28th 2024, 10:57 am
image

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேச  பொலிஸ் நிலையம் 5S(five S)திட்டத்தின் கீழ் செயற்படும் முன்மாதிரி பொலிஸ் நிலையமாக நேற்றையதினம்(27) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு சிறந்த வினைத்திறனான சேவையினை வழங்கும் நோக்குடன் பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவின் ஒரு அங்கமான பொலிஸ் நிலையங்களை 5எஸ் (Five s)திட்டத்திற்கு கொண்டுவரும் செயற்பாடு நாடுபூராகவும் இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில், அதன் ஒரு அங்கமாக வடமாகாணத்தில்   ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையம் 5S(five S)திட்டத்தின் கீழ் செயற்படும் முன்மாதிரி பொலிஸ் நிலையமாக  திறந்து வைக்கப்பட்டது.

குறித்த பொலிஸ் நிலையத்தினை வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சி.ஏ.தனபால திறந்து வைத்து பார்வையிட்டதுடன், கலந்து கொண்ட அதிதிகளால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்ததுடன் இறுதியில் மரநடுகை இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சமந்த டீசில்வா,  யாழ்ப்பாண பிரதி பொலிஸ் மா அதிபர் சி.தனபால, முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.ஜி.சந்திரசேன , நிலைய பொறுப்பதிகாரி ரஞ்சித் பமுனுசிங்க , புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பிஆர்.ஹெரத், ஒட்டிசுட்டான் பிரதேச வைத்தியசாலை வைத்தியர், பாடசாலை அதிபர், சமூக பொலிஸ் பிரிவினர், ஒட்டி சுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம சேவையாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்,  பிரதேச கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






முல்லை ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம். முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேச  பொலிஸ் நிலையம் 5S(five S)திட்டத்தின் கீழ் செயற்படும் முன்மாதிரி பொலிஸ் நிலையமாக நேற்றையதினம்(27) திறந்து வைக்கப்பட்டுள்ளது.பொது மக்களுக்கு சிறந்த வினைத்திறனான சேவையினை வழங்கும் நோக்குடன் பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவின் ஒரு அங்கமான பொலிஸ் நிலையங்களை 5எஸ் (Five s)திட்டத்திற்கு கொண்டுவரும் செயற்பாடு நாடுபூராகவும் இடம்பெற்று வருகிறது.அந்தவகையில், அதன் ஒரு அங்கமாக வடமாகாணத்தில்   ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையம் 5S(five S)திட்டத்தின் கீழ் செயற்படும் முன்மாதிரி பொலிஸ் நிலையமாக  திறந்து வைக்கப்பட்டது.குறித்த பொலிஸ் நிலையத்தினை வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சி.ஏ.தனபால திறந்து வைத்து பார்வையிட்டதுடன், கலந்து கொண்ட அதிதிகளால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்ததுடன் இறுதியில் மரநடுகை இடம்பெற்றிருந்தது.குறித்த நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சமந்த டீசில்வா,  யாழ்ப்பாண பிரதி பொலிஸ் மா அதிபர் சி.தனபால, முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.ஜி.சந்திரசேன , நிலைய பொறுப்பதிகாரி ரஞ்சித் பமுனுசிங்க , புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பிஆர்.ஹெரத், ஒட்டிசுட்டான் பிரதேச வைத்தியசாலை வைத்தியர், பாடசாலை அதிபர், சமூக பொலிஸ் பிரிவினர், ஒட்டி சுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம சேவையாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்,  பிரதேச கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement