• Nov 05 2026

முல்லைத்தீவு உதைபந்தாட்ட இறுதிபோட்டி!

Ziya / Nov 2nd 2026, 10:16 am
image

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் அளம்பில் இளந்தென்றல் விளையாட்டு கழகம் நடாத்திய 2026ம் ஆண்டுக்கான அமரர் லூயிஸ் மிக்கேற்பிள்ளை ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்ட போட்டியானது அவர்களது பேரப்பிள்ளைகளின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (01.11.2026) மாலை அளம்பில் விளையாட்டு கழக மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.


விருந்தினர்கள் பாண்ட் வாத்தியங்கள் முழங்க மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டு அமரர் மிக்கேற்பிள்ளை அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து அவரை நினைவு கூர்ந்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து அணி வீரர்கள் அறிமுகம் இடம்பெற்று உதைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டி இடம்பெற்றிருந்தது .


முல்லைத்தீவு மாவட்டத்தின் இருபெரும் துருவங்களான செம்மலை உதயசூரியன் அணியினை எதிர்த்து வட்டுவாகல் உதயசூரியன் அணியினர் களமிறங்கியிருந்தனர். விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதி சமரில்  வட்டுவாகல் உதயசூரியன் அணியினர் இரு கோலினை பெற்று வெற்றிவாகை சூடியிருந்தனர்.


போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்கட்கு காசோலையும், கேடயங்களும், பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்ததுடன், அளம்பில் கிராமத்திலிருந்து கல்வி பொதுதர சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்தி பெற்ற மாணவி, க.பொ.த உயர்தரத்தில் 3ஏ சித்தியை பெற்ற மாணவி , மற்றும் யாழ் பல்கலைகழக மருத்துவ பீட மாணவியாக திகழும் மாணவி , குறைந்த வயதில் 6 நிமிடத்தில் 197 நாடுகளின் தேசிய நகரங்களை அறிமுகப்படுத்தி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மாணவன், இலங்கை பரா துடுப்பாட்ட வீரனாக தெரிவு செய்யப்பட்டு இலங்கை, இந்தியா போட்டிகளில் கலந்து கொள்ள சென்றிருக்கின்ற கிராம சேவையாளர் கு.சுஜினோ போன்றவர்களுக்கான கௌரவிப்பு வழங்கி வைக்கப்பட்டிருந்ததுடன் கலந்து கொண்ட அதிதிகளுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.


இளம்தென்றல் விளையாட்டு கழகத்தின் தலைவர்  ச.ஜெசீலன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சிறப்பு விருந்தினராக முல்லை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உபதலைவர் குறிஞ்சிக்குமரன்,  கரிக்கட்டுமூலை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோ.மோகனராஜா, கௌரவ விருந்தினர்களாக  கரைதுறைப்பற்று விளையாட்டு உத்தியோகத்தர் தேசிந்தன் , அளம்பில் றோ.க மகாவித்தியாலய அதிபர் வே.செந்தூரன், அளம்பில் வடக்கு, தெற்கு கிராம சேவையாளர், மாதர் அபிவிருத்தி சங்கத்தினர், இளைஞர்கள், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.


விளையாட்டுப் போட்டியுடன் கிராமத்தின் கல்வி, விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களைக் கௌரவித்த இந்நிகழ்வு மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

முல்லைத்தீவு உதைபந்தாட்ட இறுதிபோட்டி முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் அளம்பில் இளந்தென்றல் விளையாட்டு கழகம் நடாத்திய 2026ம் ஆண்டுக்கான அமரர் லூயிஸ் மிக்கேற்பிள்ளை ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்ட போட்டியானது அவர்களது பேரப்பிள்ளைகளின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (01.11.2026) மாலை அளம்பில் விளையாட்டு கழக மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.விருந்தினர்கள் பாண்ட் வாத்தியங்கள் முழங்க மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டு அமரர் மிக்கேற்பிள்ளை அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து அவரை நினைவு கூர்ந்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து அணி வீரர்கள் அறிமுகம் இடம்பெற்று உதைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டி இடம்பெற்றிருந்தது .முல்லைத்தீவு மாவட்டத்தின் இருபெரும் துருவங்களான செம்மலை உதயசூரியன் அணியினை எதிர்த்து வட்டுவாகல் உதயசூரியன் அணியினர் களமிறங்கியிருந்தனர். விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதி சமரில்  வட்டுவாகல் உதயசூரியன் அணியினர் இரு கோலினை பெற்று வெற்றிவாகை சூடியிருந்தனர்.போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்கட்கு காசோலையும், கேடயங்களும், பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்ததுடன், அளம்பில் கிராமத்திலிருந்து கல்வி பொதுதர சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்தி பெற்ற மாணவி, க.பொ.த உயர்தரத்தில் 3ஏ சித்தியை பெற்ற மாணவி , மற்றும் யாழ் பல்கலைகழக மருத்துவ பீட மாணவியாக திகழும் மாணவி , குறைந்த வயதில் 6 நிமிடத்தில் 197 நாடுகளின் தேசிய நகரங்களை அறிமுகப்படுத்தி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மாணவன், இலங்கை பரா துடுப்பாட்ட வீரனாக தெரிவு செய்யப்பட்டு இலங்கை, இந்தியா போட்டிகளில் கலந்து கொள்ள சென்றிருக்கின்ற கிராம சேவையாளர் கு.சுஜினோ போன்றவர்களுக்கான கௌரவிப்பு வழங்கி வைக்கப்பட்டிருந்ததுடன் கலந்து கொண்ட அதிதிகளுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.இளம்தென்றல் விளையாட்டு கழகத்தின் தலைவர்  ச.ஜெசீலன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சிறப்பு விருந்தினராக முல்லை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உபதலைவர் குறிஞ்சிக்குமரன்,  கரிக்கட்டுமூலை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோ.மோகனராஜா, கௌரவ விருந்தினர்களாக  கரைதுறைப்பற்று விளையாட்டு உத்தியோகத்தர் தேசிந்தன் , அளம்பில் றோ.க மகாவித்தியாலய அதிபர் வே.செந்தூரன், அளம்பில் வடக்கு, தெற்கு கிராம சேவையாளர், மாதர் அபிவிருத்தி சங்கத்தினர், இளைஞர்கள், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.விளையாட்டுப் போட்டியுடன் கிராமத்தின் கல்வி, விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களைக் கௌரவித்த இந்நிகழ்வு மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement