• May 17 2024

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வுப் பணி..! மீண்டும் ஒத்திவைப்பு..!samugammedia

Sharmi / Aug 17th 2023, 2:35 pm
image

Advertisement

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று(17) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

அப்போது ஏற்கனவே எதிர்பார்த்ததைப் போன்று 21ம் திகதி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பமாக இருந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அதற்கான நிதி இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் உடனடியாக  அந்த அகழ்வுப் பணி மேற்கொள்ளமுடியாத நிலை இருப்பதாக சட்டவைத்திய அதிகாரி வாசுதேவாவினால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து உடனடியாக இந்த அகழ்வுப் பணி மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

அத்தோடு, இன்று தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தங்களுடைய பாதீடுகளை தாக்கல் செய்து அவர்கள் இந்த அகழ்வுப்  பணியில் ஈடுபட முடியுமென தெரிவித்தனர்.

அதேநேரம் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களும் இந்த அகழ்வுப் பணியில் ஈடுபடுவதற்கு தனது சம்மதத்தை தெரிவித்திருந்த நிலையில் இந்த நிதி கிடைக்கப்பெறாத நிலையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படமுடியாத நிலை இருக்கின்றது.

எனவே இந்த வழக்கு மீண்டும் இம்மாதம் 31ம் திகதி அழைக்கவிருக்கின்றது. அத்தோடு இன்று நீதிமன்றில் பிரசன்னமாகியிருக்காத பிரதேச செயலாளர், பிரதேச சபை, முல்லைத்தீவு மாவட்ட செயலக அலுவலகர், மின்சார சபை  போன்றவர்களை அடுத்த தவணை கட்டாயம் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்து இந்த அகழ்வுப் பணியை மேற்கொள்வதற்கான தீர்மானங்களை எடுப்பதற்கு ஆவன செய்யப்படும் என கூறப்பட்டது  என தெரிவித்தார்.

இந்த வழக்கு மீண்டும் 31.08.2023 அன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வுப் பணி. மீண்டும் ஒத்திவைப்பு.samugammedia முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று(17) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,அப்போது ஏற்கனவே எதிர்பார்த்ததைப் போன்று 21ம் திகதி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பமாக இருந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அதற்கான நிதி இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் உடனடியாக  அந்த அகழ்வுப் பணி மேற்கொள்ளமுடியாத நிலை இருப்பதாக சட்டவைத்திய அதிகாரி வாசுதேவாவினால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து உடனடியாக இந்த அகழ்வுப் பணி மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.அத்தோடு, இன்று தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தங்களுடைய பாதீடுகளை தாக்கல் செய்து அவர்கள் இந்த அகழ்வுப்  பணியில் ஈடுபட முடியுமென தெரிவித்தனர்.அதேநேரம் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களும் இந்த அகழ்வுப் பணியில் ஈடுபடுவதற்கு தனது சம்மதத்தை தெரிவித்திருந்த நிலையில் இந்த நிதி கிடைக்கப்பெறாத நிலையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படமுடியாத நிலை இருக்கின்றது. எனவே இந்த வழக்கு மீண்டும் இம்மாதம் 31ம் திகதி அழைக்கவிருக்கின்றது. அத்தோடு இன்று நீதிமன்றில் பிரசன்னமாகியிருக்காத பிரதேச செயலாளர், பிரதேச சபை, முல்லைத்தீவு மாவட்ட செயலக அலுவலகர், மின்சார சபை  போன்றவர்களை அடுத்த தவணை கட்டாயம் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்து இந்த அகழ்வுப் பணியை மேற்கொள்வதற்கான தீர்மானங்களை எடுப்பதற்கு ஆவன செய்யப்படும் என கூறப்பட்டது  என தெரிவித்தார்.இந்த வழக்கு மீண்டும் 31.08.2023 அன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement