• May 03 2024

குருந்தூர்மலையில் கடந்த ஆறு வருடங்களாக சிவன் கோயில் இல்லை என்ற ஏக்கம் தீர்ந்தது..! மறவன்புலவு சச்சிதானந்தன்..!samugammedia

Sharmi / Aug 17th 2023, 2:46 pm
image

Advertisement

நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக குருந்தூர் மலையில் சிவன் கோயிலைக் கட்டுவதற்கு குருந்தூர் மலை விகாராதிபதி ஒப்புதலளித்துள்ளதாக சிவசேனை அமைப்பின் தலைவர்  மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தார்.

இந்து மதத்தலைவர்கள் மற்றும் பௌத்த மதத் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் ஆரியகுளம்  நாக விகாரையில் இன்று(17) காலை நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

தொடர்ந்து ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

கேள்வி - இங்கு நடைபெற்ற கலந்துரையாடல் பற்றி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினீர்களா ?

பதில்- தமிழ் பௌத்தம் , சிங்கள பௌத்தம் மற்றும் தமிழ் சைவம் ஆகியவற்றிற்கு நீண்ட கால வரலாறு உண்டு.  சமகாலத்தில் சைவத்திற்கும்பௌத்தத்திற்குமிடையிலுள்ளசிக்கல்களைத் தீர்ப்பதற்கான முதற்படியாகவே குருந்தூர் மலை விகாராதிபதியைச் சந்தித்துள்ளோம்.  அவர்  நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக  அங்கு சிவன் கோயிலைக் கட்டுவதற்கு ஒப்புதலளித்துள்ளார்.

கேள்வி - நாளைய தினம் குருந்தூர் மலையில் பொங்கல் இடம்பெற ஏற்பாடாகியுள்ள நிலையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடலுக்கும் பொங்கலுக்கும் சம்பந்தமுள்ளதா ?

பதில்- நாளைய தினம் குருந்தூர் மலையில் பொங்கல் குருந்தூர் மலையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை இங்கிருந்து பார்க்காமல் நேரில் சென்று பார்வையிட்டால் தான் உண்மை நிலை புரியும்.
குருந்தூர் மலைக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக சென்று வரும் நிலையில் அங்கு ஒரு சிவன் கோயில் இல்லை என்ற ஏக்கம் என் மனதிலிருந்தது.  அதற்கு தற்போது குருந்தூர் விகாரை விகாராதிபதியே சிவன் கோயிலை அமைக்குமாறு கூறியுள்ளார்

கேள்வி - நாளைய தினம் குருந்தூர் மலையி்ல் பொங்கல் நடாத்துவதற்கு ஏற்பாடாகியுள்ள நிலையில் அதனை குழப்புவதற்கான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன இது பற்றி உங்கள் கருத்து ?
பதில்- நாளைய தினம்  இடம்பெறும் பொங்கலில் பங்கேற்பதற்கு மன ஒப்புதல் வேண்டும். மாறாக அரசியலுக்காக பொங்கல் செய்ய முடியாது. இதேவேளை நாளைய தினம் பொங்கலைக் குழப்ப சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக அறிந்தேன். கடந்த முறை பொங்கலின் போதும் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

அருள் பெருக்குமிடமாக கோயில் காணப்படும் நிலையில் சிலர் இருள் பெருக்குவதற்காகவும்   வேறு சிலர் பொருள் பெருக்குவதற்காகவும் செல்கின்றார்கள் இதேவேளை பௌத்த கோயிலுக்கு  இருள் பெருக்குகுவதற்காகச் செல்கின்றார்கள்  என்றால் இந் நாடு இருளில் மூழ்கியிருக்க வேண்டும் என்பதே பொருள் எனத் தெரிவித்தார்.




குருந்தூர்மலையில் கடந்த ஆறு வருடங்களாக சிவன் கோயில் இல்லை என்ற ஏக்கம் தீர்ந்தது. மறவன்புலவு சச்சிதானந்தன்.samugammedia நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக குருந்தூர் மலையில் சிவன் கோயிலைக் கட்டுவதற்கு குருந்தூர் மலை விகாராதிபதி ஒப்புதலளித்துள்ளதாக சிவசேனை அமைப்பின் தலைவர்  மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தார்.இந்து மதத்தலைவர்கள் மற்றும் பௌத்த மதத் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் ஆரியகுளம்  நாக விகாரையில் இன்று(17) காலை நடைபெற்றது.குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் தொடர்ந்து ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,கேள்வி - இங்கு நடைபெற்ற கலந்துரையாடல் பற்றி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினீர்களா பதில்- தமிழ் பௌத்தம் , சிங்கள பௌத்தம் மற்றும் தமிழ் சைவம் ஆகியவற்றிற்கு நீண்ட கால வரலாறு உண்டு.  சமகாலத்தில் சைவத்திற்கும்பௌத்தத்திற்குமிடையிலுள்ளசிக்கல்களைத் தீர்ப்பதற்கான முதற்படியாகவே குருந்தூர் மலை விகாராதிபதியைச் சந்தித்துள்ளோம்.  அவர்  நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக  அங்கு சிவன் கோயிலைக் கட்டுவதற்கு ஒப்புதலளித்துள்ளார்.கேள்வி - நாளைய தினம் குருந்தூர் மலையில் பொங்கல் இடம்பெற ஏற்பாடாகியுள்ள நிலையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடலுக்கும் பொங்கலுக்கும் சம்பந்தமுள்ளதா பதில்- நாளைய தினம் குருந்தூர் மலையில் பொங்கல் குருந்தூர் மலையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை இங்கிருந்து பார்க்காமல் நேரில் சென்று பார்வையிட்டால் தான் உண்மை நிலை புரியும். குருந்தூர் மலைக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக சென்று வரும் நிலையில் அங்கு ஒரு சிவன் கோயில் இல்லை என்ற ஏக்கம் என் மனதிலிருந்தது.  அதற்கு தற்போது குருந்தூர் விகாரை விகாராதிபதியே சிவன் கோயிலை அமைக்குமாறு கூறியுள்ளார்கேள்வி - நாளைய தினம் குருந்தூர் மலையி்ல் பொங்கல் நடாத்துவதற்கு ஏற்பாடாகியுள்ள நிலையில் அதனை குழப்புவதற்கான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன இது பற்றி உங்கள் கருத்து பதில்- நாளைய தினம்  இடம்பெறும் பொங்கலில் பங்கேற்பதற்கு மன ஒப்புதல் வேண்டும். மாறாக அரசியலுக்காக பொங்கல் செய்ய முடியாது. இதேவேளை நாளைய தினம் பொங்கலைக் குழப்ப சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக அறிந்தேன். கடந்த முறை பொங்கலின் போதும் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.அருள் பெருக்குமிடமாக கோயில் காணப்படும் நிலையில் சிலர் இருள் பெருக்குவதற்காகவும்   வேறு சிலர் பொருள் பெருக்குவதற்காகவும் செல்கின்றார்கள் இதேவேளை பௌத்த கோயிலுக்கு  இருள் பெருக்குகுவதற்காகச் செல்கின்றார்கள்  என்றால் இந் நாடு இருளில் மூழ்கியிருக்க வேண்டும் என்பதே பொருள் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement