• May 20 2024

முல்லைத்தீவில் பரபரப்பான மனித எச்சங்கள் விவகாரம்- நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு! samugammedia

Tamil nila / Jul 1st 2023, 7:04 am
image

Advertisement

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் ஜூலை 6 திகதி அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள எச்சங்களை அழிவடையாமால் பாதுகாக்க நீதிமன்றத்தினால் பொலிசாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.



குறித்த இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து கொக்கிளாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து  மனித எச்சங்கள் காணப்படுகின்றன பகுதியில் ஜூலை 6 திகதி அகழ்வு பணிக்கு நீதிபதி உத்தரவிட்டதோடு, அதற்குரிய நபர்களுக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும், அதுவரை எச்சங்கள் அழிவடையாமால் பாதுகாக்குமாறும் கொக்கிளாய் பொலிசாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


முல்லைத்தீவில் பரபரப்பான மனித எச்சங்கள் விவகாரம்- நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு samugammedia முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் ஜூலை 6 திகதி அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த பகுதியில் உள்ள எச்சங்களை அழிவடையாமால் பாதுகாக்க நீதிமன்றத்தினால் பொலிசாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.குறித்த இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து கொக்கிளாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.இந்த சம்பவத்தினை தொடர்ந்து  மனித எச்சங்கள் காணப்படுகின்றன பகுதியில் ஜூலை 6 திகதி அகழ்வு பணிக்கு நீதிபதி உத்தரவிட்டதோடு, அதற்குரிய நபர்களுக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும், அதுவரை எச்சங்கள் அழிவடையாமால் பாதுகாக்குமாறும் கொக்கிளாய் பொலிசாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement