பெண்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உற்பத்திப் பொருட்களின் பன்முகச் சந்தை இன்றைய தினம்(12) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
கிரிசாலிஸ் (chrysalis) நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பன்முகச் சந்தை நிகழ்வை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது பெண்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வீட்டு அலங்கார பொருட்கள், கைவினைப் பொருட்கள், சுவையூட்டி வகைகள், பசுமை உற்பத்திகள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டதோடு விற்பனையும் இடம் பெற்றது. இதன் போது வணிக ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் கிரிசாலிஸ் (chrysalis) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது பெண்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உற்பத்திப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற பன்முகச் சந்தை. பெண்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உற்பத்திப் பொருட்களின் பன்முகச் சந்தை இன்றைய தினம்(12) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. கிரிசாலிஸ் (chrysalis) நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பன்முகச் சந்தை நிகழ்வை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.இதன் போது பெண்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வீட்டு அலங்கார பொருட்கள், கைவினைப் பொருட்கள், சுவையூட்டி வகைகள், பசுமை உற்பத்திகள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டதோடு விற்பனையும் இடம் பெற்றது. இதன் போது வணிக ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் கிரிசாலிஸ் (chrysalis) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.இதன் போது பெண்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உற்பத்திப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.