• Jan 24 2025

14 வயது சிறுமி கொலை; தாயின் இரண்டாவது கணவனுக்கு விளக்கமறியல் உத்தரவு

Chithra / Dec 8th 2024, 3:30 pm
image

 


14 வயது சிறுமியை கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட  சிறுமியின் தாயின் இரண்டாவது கணவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடகு வைத்த நகையை மீட்க வைத்திருந்த பணத்தை போதைப்பொருள் வாங்குவதற்கு  வழங்க மறுத்த காரணத்தினால் சந்தேக நபர் சிறுமியை கொலை செய்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அகரவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 14 வயதுடைய மகள் காணாமல் போயுள்ளதாக கடந்த 5ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முறைப்பாடளித்த பெண் தனது இரண்டாவது கணவர் மற்றும் 14 வயதுடைய மகளுடன் மாகொவிட்ட பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு நபருக்கு சொந்தமான நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வீடொன்றில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாகவும், அவர் ஏகல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி கணவரும் மகளும் வீட்டில் இருந்த நிலையில் குறித்த பெண் அன்றைய தினம் வேலைக்கு சென்று பிற்பகல் வீட்டுக்கு வந்தபோது மகள் வீட்டில் இருக்கவில்லை.

இது தொடர்பில் கணவரிடம் வினவியபோது அவர், மகள் நண்பர் ஒருவரின் உறவினர்களுடன் சுற்றுலா சென்றுள்ளதாகவும் அன்றைய தினம் மகள் வீட்டிற்கு வரமாட்டர் எனவும்  பதில் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் 5 ஆம் திகதி வரை தனது மகள் வீட்டிற்கு வராத நிலையில் குறித்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையில்  முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் பெண் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சிறுமியின் தாய் தனது கணவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 42 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதற்கமைய கடந்த 2 ஆம் திகதி அடக்கு வைக்கப்பட்ட தனது மனைவியின் தங்க நகையை மீட்டெடுப்பதற்கான பணத்தை மகளிடம் வழங்கியுள்ளதாகவும் எனவே இருவரும் சென்று அதனை மீட்டு எடுக்குமாறும் பெண் தனது கணவனிடம் கூறி விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

எனினும் பெண்ணின் கணவர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான ஒருவர் என்றும் அடகு வைக்கப்பட்ட நகையை மீட்டெடுக்க வழங்கப்பட்ட பணத்தை போதைப்பொருள் வழங்குவதற்கு வழங்குமாறும் சிறுமியிடம் கோரியுள்ளார்.

எனினும் சிறுமி பணத்தை வழங்க மறுத்த நிலையில் அவரை கடுமையாக தாக்கியுள்ளதுடன் அவரிடமிருந்து பணத்தை பலவந்தமாக கைப்பற்றி வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் பிற்பகல் வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவர் சிறுமி மயங்கிய நிலையில் விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளார். பின்னர் தமது தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் செய்த கொலையை  மறைக்கும் நோக்கில் சிறுமியின் சடலத்தை பொலித்தீன் உறையில் இட்டு புதிதாக நிர்ணமாகிக்கப்பட்டு வரும் வீட்டின் பின்னாலுள்ள கழிவறைக்குள் போட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய கம்பஹா நீதவான் நீதிமன்றில் அனுமதியுடன்  பிரேத பரிசோதனைக்காக சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

14 வயது சிறுமி கொலை; தாயின் இரண்டாவது கணவனுக்கு விளக்கமறியல் உத்தரவு  14 வயது சிறுமியை கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட  சிறுமியின் தாயின் இரண்டாவது கணவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அடகு வைத்த நகையை மீட்க வைத்திருந்த பணத்தை போதைப்பொருள் வாங்குவதற்கு  வழங்க மறுத்த காரணத்தினால் சந்தேக நபர் சிறுமியை கொலை செய்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அகரவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 14 வயதுடைய மகள் காணாமல் போயுள்ளதாக கடந்த 5ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.முறைப்பாடளித்த பெண் தனது இரண்டாவது கணவர் மற்றும் 14 வயதுடைய மகளுடன் மாகொவிட்ட பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு நபருக்கு சொந்தமான நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வீடொன்றில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாகவும், அவர் ஏகல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த 2ஆம் திகதி கணவரும் மகளும் வீட்டில் இருந்த நிலையில் குறித்த பெண் அன்றைய தினம் வேலைக்கு சென்று பிற்பகல் வீட்டுக்கு வந்தபோது மகள் வீட்டில் இருக்கவில்லை.இது தொடர்பில் கணவரிடம் வினவியபோது அவர், மகள் நண்பர் ஒருவரின் உறவினர்களுடன் சுற்றுலா சென்றுள்ளதாகவும் அன்றைய தினம் மகள் வீட்டிற்கு வரமாட்டர் எனவும்  பதில் வழங்கியுள்ளார்.இந்நிலையில் 5 ஆம் திகதி வரை தனது மகள் வீட்டிற்கு வராத நிலையில் குறித்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையில்  முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் பெண் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன் சிறுமியின் தாய் தனது கணவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.இதற்கமைய 42 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.இதற்கமைய கடந்த 2 ஆம் திகதி அடக்கு வைக்கப்பட்ட தனது மனைவியின் தங்க நகையை மீட்டெடுப்பதற்கான பணத்தை மகளிடம் வழங்கியுள்ளதாகவும் எனவே இருவரும் சென்று அதனை மீட்டு எடுக்குமாறும் பெண் தனது கணவனிடம் கூறி விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.எனினும் பெண்ணின் கணவர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான ஒருவர் என்றும் அடகு வைக்கப்பட்ட நகையை மீட்டெடுக்க வழங்கப்பட்ட பணத்தை போதைப்பொருள் வழங்குவதற்கு வழங்குமாறும் சிறுமியிடம் கோரியுள்ளார்.எனினும் சிறுமி பணத்தை வழங்க மறுத்த நிலையில் அவரை கடுமையாக தாக்கியுள்ளதுடன் அவரிடமிருந்து பணத்தை பலவந்தமாக கைப்பற்றி வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.இந்நிலையில் பிற்பகல் வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவர் சிறுமி மயங்கிய நிலையில் விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளார். பின்னர் தமது தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.இந்நிலையில் செய்த கொலையை  மறைக்கும் நோக்கில் சிறுமியின் சடலத்தை பொலித்தீன் உறையில் இட்டு புதிதாக நிர்ணமாகிக்கப்பட்டு வரும் வீட்டின் பின்னாலுள்ள கழிவறைக்குள் போட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதற்கமைய கம்பஹா நீதவான் நீதிமன்றில் அனுமதியுடன்  பிரேத பரிசோதனைக்காக சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement