• Dec 27 2024

வடமராட்சி கிழக்கு பகுதியில் கரையொதுங்கிய மர்ம படகு..!

Sharmi / Dec 23rd 2024, 2:11 pm
image

யாழ் வடமராட்சி கிழக்கு,உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் படகு ஒன்று இன்று(23) காலை கரையொதுங்கியுள்ளது.

OFRP-6224JFN என்னும் இலக்கமுடைய குறித்த படகு ஆட்கள் யாருமற்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாச தலைவர் மற்றும் பொலிசார் படகை பார்வையிட்டதுடன் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இயந்திரமற்று ஆழ்கடலில் இருந்து கரையொதுங்கிய இலங்கை நாட்டிற்கு சொந்தமான குறித்த படகை கடத்தல்காரர்கள் கையாண்டிருக்கலாமென பொலிசார் சந்தேகிப்பதுடன், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


வடமராட்சி கிழக்கு பகுதியில் கரையொதுங்கிய மர்ம படகு. யாழ் வடமராட்சி கிழக்கு,உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் படகு ஒன்று இன்று(23) காலை கரையொதுங்கியுள்ளது.OFRP-6224JFN என்னும் இலக்கமுடைய குறித்த படகு ஆட்கள் யாருமற்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாச தலைவர் மற்றும் பொலிசார் படகை பார்வையிட்டதுடன் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.இயந்திரமற்று ஆழ்கடலில் இருந்து கரையொதுங்கிய இலங்கை நாட்டிற்கு சொந்தமான குறித்த படகை கடத்தல்காரர்கள் கையாண்டிருக்கலாமென பொலிசார் சந்தேகிப்பதுடன், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement