• Dec 26 2024

யாழிலிருந்து தப்பிச்சென்று நாடுமுழுவதும் கொள்ளையடித்த மர்மக்குழு சிக்கியது

Chithra / Dec 26th 2024, 8:01 am
image

 


யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கம்பளை கலஹா போன்ற  நாட்டில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று 21க்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் நகைக்கடைகளை உடைத்து பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள், தங்கம், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற இளைஞர்கள் குழுவொன்றை கம்பளை கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பகுதியில் மூன்று திருட்டுகளும், வவுனியா இச்சகுளத்தில் நான்கு திருட்டுகளும், யாழ் கைட்ஸில் மூன்று திருட்டுகளும், வவுனியா மாமந்துவில் மூன்று திருட்டுகளும், கம்பளை கலஹா பகுதியில் ஏழு திருட்டுகளும், நுவரெலியா கந்தபொல பகுதியில் ஏழு திருட்டுகளும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கலஹா பகுதியில் உள்ள மூன்று நகைக்கடைகள் , கோவிலில் நகைகளும்  மருந்து கடையில் புகுந்து பன்னிரெண்டு லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில்  மாத்திரம் இந்த சந்தேக நபர்களுக்கு ஒன்பது பிடியாணைகள் உள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.


யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் நான்கு வருடங்களாக இத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு நீதிமன்றங்கள் வழங்கிய பிடியாணையுடன் மாத்தளை, கந்தபொல, கலஹா போன்ற பகுதிகளுக்கு அவ்வப்போது சென்று வாடகைக்கு வீடுகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இந்தத் திருட்டுச் சம்பவங்களைச் செய்து வந்துள்ளனர். .

அந்தவகையில் 19,21,22,23, 26,33 ஆகிய வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவங்கள் மூலம் சம்பாதித்த பணமெல்லாம் குடு மற்றும் ஜஸ் போதை பொருட்களுக்கு   செலவிடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இவர்களால் நாடளாவிய ரீதியில் திருடப்பட்ட தங்கக் கட்டிகள் சில  யாழ்ப்பாணப் பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சந்தேகநபர்கள் அனைவரும் கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

யாழிலிருந்து தப்பிச்சென்று நாடுமுழுவதும் கொள்ளையடித்த மர்மக்குழு சிக்கியது  யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கம்பளை கலஹா போன்ற  நாட்டில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று 21க்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் நகைக்கடைகளை உடைத்து பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள், தங்கம், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற இளைஞர்கள் குழுவொன்றை கம்பளை கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் பகுதியில் மூன்று திருட்டுகளும், வவுனியா இச்சகுளத்தில் நான்கு திருட்டுகளும், யாழ் கைட்ஸில் மூன்று திருட்டுகளும், வவுனியா மாமந்துவில் மூன்று திருட்டுகளும், கம்பளை கலஹா பகுதியில் ஏழு திருட்டுகளும், நுவரெலியா கந்தபொல பகுதியில் ஏழு திருட்டுகளும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அதன்படி, கலஹா பகுதியில் உள்ள மூன்று நகைக்கடைகள் , கோவிலில் நகைகளும்  மருந்து கடையில் புகுந்து பன்னிரெண்டு லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில்  மாத்திரம் இந்த சந்தேக நபர்களுக்கு ஒன்பது பிடியாணைகள் உள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் நான்கு வருடங்களாக இத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு நீதிமன்றங்கள் வழங்கிய பிடியாணையுடன் மாத்தளை, கந்தபொல, கலஹா போன்ற பகுதிகளுக்கு அவ்வப்போது சென்று வாடகைக்கு வீடுகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இந்தத் திருட்டுச் சம்பவங்களைச் செய்து வந்துள்ளனர். .அந்தவகையில் 19,21,22,23, 26,33 ஆகிய வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவங்கள் மூலம் சம்பாதித்த பணமெல்லாம் குடு மற்றும் ஜஸ் போதை பொருட்களுக்கு   செலவிடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.இவர்களால் நாடளாவிய ரீதியில் திருடப்பட்ட தங்கக் கட்டிகள் சில  யாழ்ப்பாணப் பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சந்தேகநபர்கள் அனைவரும் கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement