• Nov 24 2024

மன்னாரில் மர்மம்...! அடுத்தடுத்து மடியும் உயிர்கள்- பீதியில் மக்கள்

Sharmi / Jun 22nd 2024, 9:40 am
image

மன்னார் உப்புக்குளம் நளவன் வாடி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவமானது கடந்த சில தினங்களாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,,

மிகவும் ஆரோக்கியமாக அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டு கிரமமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த நாய்கள் திடீரென இறப்பது தங்களுக்கு வேதனையளிப்பதாகவும் தெரிவித்தனர். 

குறித்த நாய்கள் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

இதுவரை 8 நாய்கள் இவ்வாறு உயிரிழந்த நிலையில் மேலும் மூன்று நாய்களின் நிலை  கவலைக்கிடமாக இருப்பதாகவும் குறித்த நாய்களுக்கு அப்பகுதியில் யாரோ நஞ்சு கலந்த உணவை  வழங்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் நாய்கள் மாத்திரமன்றி காகங்கள் மற்றும் கோழிகளும் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இச் சம்பவம் குறித்து உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாய்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



மன்னாரில் மர்மம். அடுத்தடுத்து மடியும் உயிர்கள்- பீதியில் மக்கள் மன்னார் உப்புக்குளம் நளவன் வாடி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இச்சம்பவமானது கடந்த சில தினங்களாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,,மிகவும் ஆரோக்கியமாக அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டு கிரமமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த நாய்கள் திடீரென இறப்பது தங்களுக்கு வேதனையளிப்பதாகவும் தெரிவித்தனர். குறித்த நாய்கள் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்று வருகின்றது.இதுவரை 8 நாய்கள் இவ்வாறு உயிரிழந்த நிலையில் மேலும் மூன்று நாய்களின் நிலை  கவலைக்கிடமாக இருப்பதாகவும் குறித்த நாய்களுக்கு அப்பகுதியில் யாரோ நஞ்சு கலந்த உணவை  வழங்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.இந்நிலையில் நாய்கள் மாத்திரமன்றி காகங்கள் மற்றும் கோழிகளும் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.இச் சம்பவம் குறித்து உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாய்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement