• May 21 2024

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை - யாழ்ப்பாணம் வந்தடைந்தது “செரியாபாணி”! samugammedia

Chithra / Oct 8th 2023, 4:37 pm
image

Advertisement

 

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகம் – இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் இடையிலான “செரியாபாணி” என்ற பயணிகள் கப்பல் சேவை இன்றைய தினம் பரீட்சார்த்த சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது.

அதன் பிரகாரம் இன்று காலை 11 மணியளவில் இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் மதியம் 1.15 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்திருந்தது.

இந்த கப்பலில் பணியாற்றும் 14 பணியாளர்கள் மட்டுமே பரீட்சார்த்த நடவடிக்கைகளின் போது வருகை தந்திருந்தனர்.

இதன் போது கப்பல் சேவைக்கு பயன்படுத்தப்படும் கடல் பாதை, கடல் மற்றும் காலநிலை நிலவரம் சகல விடயங்களும் கணக்கெடுக்கப்பட்டது.

பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொண்டமையை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

சுமார் அரை மணி நேரம் தரித்து நின்ற பின்னர் மதியம் 1.45 மணியளவில் மீண்டும் இக்கப்பல் நாகப்பட்டிணம் நோக்கி புறப்பட்டது.

நாகப்பட்டிணம் காங்கேசன்துறை இடையே பயணிக்க இருவழிக் கட்ணமாக 53500 ரூபாயும், ஒருவழிக் கட்டணமாக 27,000ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் பயணிகள் தங்களுடன் 40 கிலோ வரை உள்ள பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை - யாழ்ப்பாணம் வந்தடைந்தது “செரியாபாணி” samugammedia  இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகம் – இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் இடையிலான “செரியாபாணி” என்ற பயணிகள் கப்பல் சேவை இன்றைய தினம் பரீட்சார்த்த சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது.அதன் பிரகாரம் இன்று காலை 11 மணியளவில் இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் மதியம் 1.15 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்திருந்தது.இந்த கப்பலில் பணியாற்றும் 14 பணியாளர்கள் மட்டுமே பரீட்சார்த்த நடவடிக்கைகளின் போது வருகை தந்திருந்தனர்.இதன் போது கப்பல் சேவைக்கு பயன்படுத்தப்படும் கடல் பாதை, கடல் மற்றும் காலநிலை நிலவரம் சகல விடயங்களும் கணக்கெடுக்கப்பட்டது.பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொண்டமையை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.சுமார் அரை மணி நேரம் தரித்து நின்ற பின்னர் மதியம் 1.45 மணியளவில் மீண்டும் இக்கப்பல் நாகப்பட்டிணம் நோக்கி புறப்பட்டது.நாகப்பட்டிணம் காங்கேசன்துறை இடையே பயணிக்க இருவழிக் கட்ணமாக 53500 ரூபாயும், ஒருவழிக் கட்டணமாக 27,000ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் தங்களுடன் 40 கிலோ வரை உள்ள பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement