• Jan 09 2025

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை - புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பம்!

Chithra / Dec 30th 2024, 12:22 pm
image

 

இந்தியா நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தமிழகம் மற்றும் இலங்கை இடையே கப்பல் சேவை சுமார் 40 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தற்காலிகமாக சமீபத்தில் இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இந்த சேவை ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என்றும், இதற்கான முன்பதிவு டிசம்பர் 25 முதல் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சேவை வாரத்திற்கு 6 நாட்கள் இருக்கும் எனவும், ஒரு சுற்றுக்கான போக்குவரத்து பயணச்சீட்டு செலவு 35,000 ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை - புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பம்  இந்தியா நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.தமிழகம் மற்றும் இலங்கை இடையே கப்பல் சேவை சுமார் 40 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தற்காலிகமாக சமீபத்தில் இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.இந்நிலையில், மீண்டும் இந்த சேவை ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என்றும், இதற்கான முன்பதிவு டிசம்பர் 25 முதல் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த சேவை வாரத்திற்கு 6 நாட்கள் இருக்கும் எனவும், ஒரு சுற்றுக்கான போக்குவரத்து பயணச்சீட்டு செலவு 35,000 ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement