• Sep 22 2024

ஊழல் வழக்கிலிருந்து நாலக கொடஹேவா விடுதலை

Chithra / Jan 26th 2023, 12:07 pm
image

Advertisement

அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட நாலக கொடஹேவா உள்ளிட்ட பிரதிநிதிகள் மூவரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசுத் தரப்பு முன்வைத்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்.

விடுவிக்கப்பட்ட ஏனைய பிரதிவாதிகளில் முன்னாள் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க பெரேரா மற்றும் “தாருண்யட ஹெடக்” அமைப்பின் ரொனி இப்ராஹிம் ஆகியோர் அடங்குகின்றனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாலக கொடஹேவா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

ஊழல் வழக்கிலிருந்து நாலக கொடஹேவா விடுதலை அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட நாலக கொடஹேவா உள்ளிட்ட பிரதிநிதிகள் மூவரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தீர்ப்பு வழங்கியுள்ளார்.பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசுத் தரப்பு முன்வைத்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்.விடுவிக்கப்பட்ட ஏனைய பிரதிவாதிகளில் முன்னாள் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க பெரேரா மற்றும் “தாருண்யட ஹெடக்” அமைப்பின் ரொனி இப்ராஹிம் ஆகியோர் அடங்குகின்றனர்.கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாலக கொடஹேவா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement