இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் போது கமிஷன் பெறுவதாக ஆதாரம் இருந்தால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வேண்டும் என்றும் அது உறுதி செய்யப்பட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத், முட்டை இறக்குமதியில் கமிசன் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சு பதவியை துறக்க தயாராகும் நளீன் பெர்னாண்டோ. வெளியான அதிரடி அறிவிப்பு இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் போது கமிஷன் பெறுவதாக ஆதாரம் இருந்தால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வேண்டும் என்றும் அது உறுதி செய்யப்பட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத், முட்டை இறக்குமதியில் கமிசன் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.