ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் விசாரணைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு விசாரணை சுருக்கமொன்றை நீதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் நேற்று கிராமத்துக்கு கிராமம் வேலைத்திட்டத்தை ஆரம்பித்த போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் நீதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த வழக்கு தொடர்பில் எத்தனை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன? என்பது குறித்த சுருக்கமொன்றை விசாரணைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும்.
அதேவேளை அரசாங்கமானது நீதித்துறை, சட்டமா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றை சவாலுக்கு உட்படுத்தும் செயற்பாடுகளையும் நிறுத்த வேண்டும்.
முன்னர் தான் பணியாற்றிய சட்டமா அதிபர் திணைக்களத்தை சவாலுக்குட்படுத்துவதை நீதி அமைச்சர் தவிர்த்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கின்றோம்.
அநுரபிரி தர்ஷன யாபா மற்றும் யோஷித கைது செய்யப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்களம் சிறப்பாக செயற்பட்டதாகக் கூறிய அரசாங்கம், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட போது அதற்கு முரணாக விமர்சிக்கின்றது. என்றார்
சட்டமா அதிபர் திணைக்களத்தை சவாலுக்குட்படுத்தும் அரசு - நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் விசாரணைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு விசாரணை சுருக்கமொன்றை நீதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.பொலன்னறுவை மாவட்டத்தில் நேற்று கிராமத்துக்கு கிராமம் வேலைத்திட்டத்தை ஆரம்பித்த போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் நீதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும். இந்த வழக்கு தொடர்பில் எத்தனை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறித்த சுருக்கமொன்றை விசாரணைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும்.அதேவேளை அரசாங்கமானது நீதித்துறை, சட்டமா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றை சவாலுக்கு உட்படுத்தும் செயற்பாடுகளையும் நிறுத்த வேண்டும். முன்னர் தான் பணியாற்றிய சட்டமா அதிபர் திணைக்களத்தை சவாலுக்குட்படுத்துவதை நீதி அமைச்சர் தவிர்த்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கின்றோம். அநுரபிரி தர்ஷன யாபா மற்றும் யோஷித கைது செய்யப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்களம் சிறப்பாக செயற்பட்டதாகக் கூறிய அரசாங்கம், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட போது அதற்கு முரணாக விமர்சிக்கின்றது. என்றார்