காசாவை இரண்டாக பிரிக்கும் வகையில் இஸ்ரேல் அமைத்த நெட்சரிம் தாழ்வாரத்தில் இருந்து இஸ்ரேலியப் படை வாபஸ் பெற ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான ஐந்தாவது கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றிருக்கும் நிலையிலேயே போர் நிறுத்தத்தின் ஓர் அங்கமாக குறித்த படை நெட்சரிம் பகுதியை கைவிட்டுள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் படை நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், லெபனான் மற்றும் சிரியாவில் நடத்திய தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த ஜனவரி 19 அன்று அமுலுக்கு வந்த போர் நிறுத்தத்தின் பின்னர் ஐந்தாவது முறையாக கடந்த சனிக்கிழமை (08) கைதிகள் பரிமாற்றம் ஒன்று இடம்பெற்றது. இதன்போது மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்த நிலையில் அதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 183 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதன்போது 52, 34, 56 வயதுடைய மூன்று பணயக்கைதிகளையே முதலாம் கட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின்படி சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்தது. இவர்கள் கையளிக்கப்படும் முன்னர் ஹமாஸ் போராளிகள் சூழ, மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் அமைக்கப்பட்ட மேடையில் ஏற்றப்பட்டனர்.
அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக கோசம் எழுப்பினர். இவர்கள் விடுவிக்கப்பட்ட உடன் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஒபர் சிறைச்சாலையில் இருந்து பலஸ்தீன கைதிகள் வெளியேறும் காட்சிகளை இஸ்ரேலிய தொலைக்காட்சிகள் வெளியிட்டன. இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களை ரமல்லா நகரில் கூடிய பலஸ்தீனர்கள் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.
இவ்வாறு விடுதலை பெற்று வந்த ஏழு பலஸ்தீனர்கள் ரமல்லாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பலஸ்தீன கைதிகள் சங்கம் தெரிவித்தது. மேலும் எழுவர் நாடு கடத்தப்படுவதற்காக எகிப்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் ஹமாஸ் அமைப்பின் மூத்த உறுப்பினரான 49 வயது இயாத் அபூ ஷகதமும் உள்ளார். 2000ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பலஸ்தீன எழுச்சிப் போராட்டத்தின்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்காக அவர் சுமார் 21 ஆண்டுகள் சிறை அனுபவித்து வந்தார்.
காசாவை இரண்டாக பிரிக்கும் நெட்சரிம் தாழ்வாரத்தில் இருந்து இஸ்ரேல் வாபஸ் காசாவை இரண்டாக பிரிக்கும் வகையில் இஸ்ரேல் அமைத்த நெட்சரிம் தாழ்வாரத்தில் இருந்து இஸ்ரேலியப் படை வாபஸ் பெற ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான ஐந்தாவது கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றிருக்கும் நிலையிலேயே போர் நிறுத்தத்தின் ஓர் அங்கமாக குறித்த படை நெட்சரிம் பகுதியை கைவிட்டுள்ளது.காசாவில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் படை நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், லெபனான் மற்றும் சிரியாவில் நடத்திய தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.இதில் கடந்த ஜனவரி 19 அன்று அமுலுக்கு வந்த போர் நிறுத்தத்தின் பின்னர் ஐந்தாவது முறையாக கடந்த சனிக்கிழமை (08) கைதிகள் பரிமாற்றம் ஒன்று இடம்பெற்றது. இதன்போது மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்த நிலையில் அதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 183 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.இதன்போது 52, 34, 56 வயதுடைய மூன்று பணயக்கைதிகளையே முதலாம் கட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின்படி சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்தது. இவர்கள் கையளிக்கப்படும் முன்னர் ஹமாஸ் போராளிகள் சூழ, மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் அமைக்கப்பட்ட மேடையில் ஏற்றப்பட்டனர்.அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக கோசம் எழுப்பினர். இவர்கள் விடுவிக்கப்பட்ட உடன் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஒபர் சிறைச்சாலையில் இருந்து பலஸ்தீன கைதிகள் வெளியேறும் காட்சிகளை இஸ்ரேலிய தொலைக்காட்சிகள் வெளியிட்டன. இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களை ரமல்லா நகரில் கூடிய பலஸ்தீனர்கள் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.இவ்வாறு விடுதலை பெற்று வந்த ஏழு பலஸ்தீனர்கள் ரமல்லாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பலஸ்தீன கைதிகள் சங்கம் தெரிவித்தது. மேலும் எழுவர் நாடு கடத்தப்படுவதற்காக எகிப்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் ஹமாஸ் அமைப்பின் மூத்த உறுப்பினரான 49 வயது இயாத் அபூ ஷகதமும் உள்ளார். 2000ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பலஸ்தீன எழுச்சிப் போராட்டத்தின்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்காக அவர் சுமார் 21 ஆண்டுகள் சிறை அனுபவித்து வந்தார்.