• Nov 17 2024

பிரம்மாண்டமாக ஆரம்பமாகும் நாமல் ராஜபக்சவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்

Chithra / Aug 21st 2024, 9:16 am
image

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (21) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டத்தை அனுராதபுரத்தில் நடத்த முடிந்தமை பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வெற்றியடையச் செய்யும் நோக்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரம் கடபனஹா பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஎன சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில், கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபச்ச  உள்ளிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசியல் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த பேரணிக்கு வேறு மாகாணங்களில் இருந்து கூட்டத்தை வரவழைக்க வேண்டாம் என கட்சி அமைப்பாளர்களுக்கு நாமல் பணிப்புரை விடுத்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதுடன், தொலைதூர பிரதேசங்களில் இருந்து மக்களை கொண்டு வருவதன் மூலம் மக்களின் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.


பிரம்மாண்டமாக ஆரம்பமாகும் நாமல் ராஜபக்சவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (21) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டத்தை அனுராதபுரத்தில் நடத்த முடிந்தமை பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த வெற்றியாகும்.ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வெற்றியடையச் செய்யும் நோக்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரம் கடபனஹா பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஎன சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.குறித்த நிகழ்வில், கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபச்ச  உள்ளிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசியல் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த பேரணிக்கு வேறு மாகாணங்களில் இருந்து கூட்டத்தை வரவழைக்க வேண்டாம் என கட்சி அமைப்பாளர்களுக்கு நாமல் பணிப்புரை விடுத்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதுடன், தொலைதூர பிரதேசங்களில் இருந்து மக்களை கொண்டு வருவதன் மூலம் மக்களின் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement