• Oct 17 2024

மொட்டு கட்சியின் வாக்குகளை 69 இலட்சத்தில் இருந்து மூன்று இலட்சமாக குறைத்தவர் நாமலே - முன்னாள் சகா பகிரங்கம்

Chithra / Oct 17th 2024, 1:22 pm
image

Advertisement

 

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தனியாகக் கேட்க வேண்டாம் என்று நாமும் கூறினோம். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கூறினார். ஆனால் நாமல்  அதை கேட்கவில்லை என தாயக மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம  தெரிவித்துள்ளார்.

கேகாலை அம்பன்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற கட்சியின் கேகாலை வேட்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். 

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

பொதுஜன பெரமுனவின் வாக்குகளை அறுபத்தொன்பது இலட்சத்தில் இருந்து மூன்று இலட்சமாக குறைத்தவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே ஆவார்.

வலுவான எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை. வலுவான எதிர்க்கட்சி என்றால் பாரம்பரிய அரசியலுக்கு செல்ல மாட்டோம். கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் வீழ்ச்சியடையக் காரணம் பலமான எதிர்க்கட்சி இல்லாததே.

பலமான எதிர்க்கட்சி என்பது அதிக எம்பிக்களைக் கொண்ட எதிர்க்கட்சி அல்ல. இது தரத்தில் வலுவாக இருக்க வேண்டும்  என்றும் அவர் கூறினார்.

திலும் அமுனுகம முன்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தற்போது திலித்த ஜயவீர தலைமையிலான தாயக மக்கள் கட்சியுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொட்டு கட்சியின் வாக்குகளை 69 இலட்சத்தில் இருந்து மூன்று இலட்சமாக குறைத்தவர் நாமலே - முன்னாள் சகா பகிரங்கம்  நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தனியாகக் கேட்க வேண்டாம் என்று நாமும் கூறினோம். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கூறினார். ஆனால் நாமல்  அதை கேட்கவில்லை என தாயக மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம  தெரிவித்துள்ளார்.கேகாலை அம்பன்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற கட்சியின் கேகாலை வேட்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;பொதுஜன பெரமுனவின் வாக்குகளை அறுபத்தொன்பது இலட்சத்தில் இருந்து மூன்று இலட்சமாக குறைத்தவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே ஆவார்.வலுவான எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை. வலுவான எதிர்க்கட்சி என்றால் பாரம்பரிய அரசியலுக்கு செல்ல மாட்டோம். கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் வீழ்ச்சியடையக் காரணம் பலமான எதிர்க்கட்சி இல்லாததே.பலமான எதிர்க்கட்சி என்பது அதிக எம்பிக்களைக் கொண்ட எதிர்க்கட்சி அல்ல. இது தரத்தில் வலுவாக இருக்க வேண்டும்  என்றும் அவர் கூறினார்.திலும் அமுனுகம முன்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தற்போது திலித்த ஜயவீர தலைமையிலான தாயக மக்கள் கட்சியுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement