பொதுத் தேர்தலில் வாக்காளர்களால் 10 ஆவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 196 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்துக்கமைய, இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை தங்களது கட்சியின் சார்பில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் கட்சிகள் அறிவிக்க வேண்டும்.
அதன் பின்னர் 29 தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்கள்- வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு பொதுத் தேர்தலில் வாக்காளர்களால் 10 ஆவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 196 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்துக்கமைய, இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை தங்களது கட்சியின் சார்பில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் கட்சிகள் அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் 29 தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும்.