• May 20 2024

விழாக்காலங்களில் மாசடையும் நந்திக்கடல்..! எடுக்கப்பட்ட நடவடிக்கை samugammedia

Chithra / Jun 6th 2023, 9:21 am
image

Advertisement

நந்திக்கடலை பாதுகாக்கும் நோக்கில் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்கள் கலந்து நந்திக்கடல் அசுத்தமாக்கப்படுவதை தடுக்க இரண்டு கிலோமீற்றர் நீளத்திற்கு பாதுகாப்பு வலை அமைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வற்றாப்பளை கண்ணகி மாட்டுவண்டில் சவாரி சங்கத்தினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்விற்காக நாட்டின் பல பாகங்களிலும் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவது வழமை.

இந்த மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் பொலீத்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்கள் கடந்த காலங்களில் நந்திகடலில் கலந்து அசுத்தமாக்கப்படுவதுடன் அதில் வாழும் கடல் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் செயற்பாடாக காணப்பட்டுள்ளது.


பொங்கல் காலங்களில் ஆலயத்தில் வளாகத்தில் வியாபார நிலையங்கள் அமைக்கப்படுவது வழமை அவ்வாறு வியாபார நிலையத்தினரால் வெளியேற்றப்படும் உக்க முடியாத பொலீத்தீன், இறப்பர் போன்றன நந்திகடலில் கலக்கின்றது.

இதனை தடுக்கும் முகமாக நந்திக்கடல் கரையோர பகுதியில் சுமார் இரண்டு கிலோமீற்றர் நீளத்திற்கு பாதுகாப்பு வலை கட்டப்பட்டுள்ளது.

இந்த வலையமைப்பு ஊடாக நந்திகடலுக்குள் காற்றினால் இழுத்து செல்லப்படும் உக்க முடியாத பொருட்களை பாதுகாப்பதற்காக தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.


நந்திக்கடலை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட சிறந்த பணிக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

விழாக்காலங்களில் மாசடையும் நந்திக்கடல். எடுக்கப்பட்ட நடவடிக்கை samugammedia நந்திக்கடலை பாதுகாக்கும் நோக்கில் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்கள் கலந்து நந்திக்கடல் அசுத்தமாக்கப்படுவதை தடுக்க இரண்டு கிலோமீற்றர் நீளத்திற்கு பாதுகாப்பு வலை அமைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.வற்றாப்பளை கண்ணகி மாட்டுவண்டில் சவாரி சங்கத்தினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்விற்காக நாட்டின் பல பாகங்களிலும் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவது வழமை.இந்த மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் பொலீத்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்கள் கடந்த காலங்களில் நந்திகடலில் கலந்து அசுத்தமாக்கப்படுவதுடன் அதில் வாழும் கடல் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் செயற்பாடாக காணப்பட்டுள்ளது.பொங்கல் காலங்களில் ஆலயத்தில் வளாகத்தில் வியாபார நிலையங்கள் அமைக்கப்படுவது வழமை அவ்வாறு வியாபார நிலையத்தினரால் வெளியேற்றப்படும் உக்க முடியாத பொலீத்தீன், இறப்பர் போன்றன நந்திகடலில் கலக்கின்றது.இதனை தடுக்கும் முகமாக நந்திக்கடல் கரையோர பகுதியில் சுமார் இரண்டு கிலோமீற்றர் நீளத்திற்கு பாதுகாப்பு வலை கட்டப்பட்டுள்ளது.இந்த வலையமைப்பு ஊடாக நந்திகடலுக்குள் காற்றினால் இழுத்து செல்லப்படும் உக்க முடியாத பொருட்களை பாதுகாப்பதற்காக தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.நந்திக்கடலை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட சிறந்த பணிக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

Advertisement