• Nov 26 2024

பாரத பிரதமராக நரேந்திர மோடி சற்று முன் பதவிப் பிரமாணம்!

Tamil nila / Jun 9th 2024, 8:38 pm
image

இந்திய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்றதையடுத்து மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி பாரதப் பிரதமராக சற்று முன்னர் உத்தியோகப்பூர்வமாக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.

டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (09.06.24) பிரதமர் மோடி உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றார்.

அந்நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து மோடி பதவியேற்றுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது

ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர் மூன்றாவது முறையாக பிரதமராகும் அங்கீகாரத்தை பிரதமர் மோடி பெற்று வரலாறு படைத்துள்ளார்.

இதன்பின்னர் மோடி 2014, 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாகவும் பிரதமர் கதிரையை தன்வசப்படுத்தினார்.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மலைத் தீவு ஜனாதிபதி முகமது மூயிஸ்,

சீசெசல்ஸ் துணை ஜனாதிபதி அகமது அஃபிப், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜூக்னாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் எனும் பிரசண்டா, பூட்டான் பிரதமர் ஷெரிங் தோப்கே ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய - மாலைத்தீவு இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பு மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸிற்கு விடுக்கப்பட்டது.

அழைப்பை ஏற்று மாலைத்தீவு ஜனாதிபதியும் இந்த விழாவில் பங்கேற்றமை வியப்புக்குரியதாகும்.

பாரத பிரதமராக நரேந்திர மோடி சற்று முன் பதவிப் பிரமாணம் இந்திய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்றதையடுத்து மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி பாரதப் பிரதமராக சற்று முன்னர் உத்தியோகப்பூர்வமாக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (09.06.24) பிரதமர் மோடி உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றார்.அந்நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து மோடி பதவியேற்றுள்ளார்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைத்துள்ளதுஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர் மூன்றாவது முறையாக பிரதமராகும் அங்கீகாரத்தை பிரதமர் மோடி பெற்று வரலாறு படைத்துள்ளார்.இதன்பின்னர் மோடி 2014, 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாகவும் பிரதமர் கதிரையை தன்வசப்படுத்தினார்.பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மலைத் தீவு ஜனாதிபதி முகமது மூயிஸ்,சீசெசல்ஸ் துணை ஜனாதிபதி அகமது அஃபிப், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜூக்னாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் எனும் பிரசண்டா, பூட்டான் பிரதமர் ஷெரிங் தோப்கே ஆகியோர் பங்கேற்றனர்.இந்திய - மாலைத்தீவு இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பு மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸிற்கு விடுக்கப்பட்டது.அழைப்பை ஏற்று மாலைத்தீவு ஜனாதிபதியும் இந்த விழாவில் பங்கேற்றமை வியப்புக்குரியதாகும்.

Advertisement

Advertisement

Advertisement