• May 02 2024

நாசா விஞ்ஞானிகள் இலங்கை விஜயம்..! - ஆய்வுகள் தொடர்பில் அறிவிப்பு! samugammedia

Chithra / Jul 3rd 2023, 8:46 am
image

Advertisement

செவ்வாய்க் கிரகத்தில் உள்ள கற்களுக்கும் இலங்கையில் காணப்படும் கற்களுக்கும் உள்ள ஒற்றுமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நாசாவின் விஞ்ஞானிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவில் மூத்த விஞ்ஞானியான இலங்கைப் பிரஜையான சுனிதி கருணாதிலகே தலைமையிலான நிபுணர்கள் குழுவே இலங்கைக்கு வரவுள்ளது.

அவர்கள் முதலில் கினிகல்பலஸ்ஸ மற்றும் இண்டிகொலபலஸ்ஸ ஆகிய பகுதிகளுக்கு சென்று, பின்னர் நாட்டின் தென் மாகாணத்தில் உள்ள உஸ்ஸங்கொட பகுதிக்கு பயணிக்கவுள்ளனர்.

இந்தநிலையில், இலங்கையின் புவியியல் அம்சங்கள் செவ்வாய் கிரகத்தில் உள்ள சில பாறைகள் மற்றும் மண்ணுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையை தீவு உருவாக்குவதைக் காட்டுவதாக சுனிதி கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த, களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கபுகொல்லே ஆனந்தகித்தி தேரர், நீல பளிங்கு பாறை அல்லது நீல் கருடா நிலவுக்கல் அல்லது சந்திரகாந்தா என்ற இரண்டு பாறைகள் தொடர்பிலேயே ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாசா விஞ்ஞானிகள் இலங்கை விஜயம். - ஆய்வுகள் தொடர்பில் அறிவிப்பு samugammedia செவ்வாய்க் கிரகத்தில் உள்ள கற்களுக்கும் இலங்கையில் காணப்படும் கற்களுக்கும் உள்ள ஒற்றுமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நாசாவின் விஞ்ஞானிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாசாவில் மூத்த விஞ்ஞானியான இலங்கைப் பிரஜையான சுனிதி கருணாதிலகே தலைமையிலான நிபுணர்கள் குழுவே இலங்கைக்கு வரவுள்ளது.அவர்கள் முதலில் கினிகல்பலஸ்ஸ மற்றும் இண்டிகொலபலஸ்ஸ ஆகிய பகுதிகளுக்கு சென்று, பின்னர் நாட்டின் தென் மாகாணத்தில் உள்ள உஸ்ஸங்கொட பகுதிக்கு பயணிக்கவுள்ளனர்.இந்தநிலையில், இலங்கையின் புவியியல் அம்சங்கள் செவ்வாய் கிரகத்தில் உள்ள சில பாறைகள் மற்றும் மண்ணுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையை தீவு உருவாக்குவதைக் காட்டுவதாக சுனிதி கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த, களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கபுகொல்லே ஆனந்தகித்தி தேரர், நீல பளிங்கு பாறை அல்லது நீல் கருடா நிலவுக்கல் அல்லது சந்திரகாந்தா என்ற இரண்டு பாறைகள் தொடர்பிலேயே ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement