• Oct 19 2024

தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள்; யாழ்.மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை! samugammedia

Chithra / May 9th 2023, 9:00 am
image

Advertisement


இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 63ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் யாழ்.மாவட்டத்தினை சேர்ந்த மாணவர்கள் பலர் பங்குப்பற்றி பதக்கங்களை வென்றுள்ளனர்.

2023 யாழ்.ஹாட்லிக்கல்லூரி வீரர் சு.மிதுன்ராஜ் குண்டெறிதல் மற்றும் தட்டெறிதல் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றும் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

பெண்களுக்கான கோலுன்றிப்பாய்தலில் யாழ்.மாவட்டத்திற்கு 2 தங்கம் உட்பட 4 பதக்கங்கள் இன்று கிடைத்துள்ளன சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு தங்கம்,வெள்ளியும்,இந்துக் கல்லூரி பி.அபிஷாலினி 2.90 மீற்றர் பாய்ந்து தங்கத்தையும், கே.மாதங்கி 2.30 மீற்றர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

23 வயதுக்குட்பட்ட பிரிவில் யாழ்.பல்கலை வீராங்கனை என்.டக்சிதா 3.40 மீற்றர் பாய்ந்து தங்க பதக்கத்தை சுவீகரித்துள்ளார். மேலும், யாழ்.விக்டோரியா வீராங்கனை எஸ்.கிறிஸ்டிகா 2.60 மீற்றர் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் கே. தேவமதுமிதன் (12.68 மீற்றர்) வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும், 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி வீராங்கனை விநாயகமூர்த்தி சங்கீதா (30.48 மீற்றர்) வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.


தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள்; யாழ்.மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை samugammedia இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 63ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் யாழ்.மாவட்டத்தினை சேர்ந்த மாணவர்கள் பலர் பங்குப்பற்றி பதக்கங்களை வென்றுள்ளனர்.2023 யாழ்.ஹாட்லிக்கல்லூரி வீரர் சு.மிதுன்ராஜ் குண்டெறிதல் மற்றும் தட்டெறிதல் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றும் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.பெண்களுக்கான கோலுன்றிப்பாய்தலில் யாழ்.மாவட்டத்திற்கு 2 தங்கம் உட்பட 4 பதக்கங்கள் இன்று கிடைத்துள்ளன சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு தங்கம்,வெள்ளியும்,இந்துக் கல்லூரி பி.அபிஷாலினி 2.90 மீற்றர் பாய்ந்து தங்கத்தையும், கே.மாதங்கி 2.30 மீற்றர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.23 வயதுக்குட்பட்ட பிரிவில் யாழ்.பல்கலை வீராங்கனை என்.டக்சிதா 3.40 மீற்றர் பாய்ந்து தங்க பதக்கத்தை சுவீகரித்துள்ளார். மேலும், யாழ்.விக்டோரியா வீராங்கனை எஸ்.கிறிஸ்டிகா 2.60 மீற்றர் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார்.இதேவேளை 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் கே. தேவமதுமிதன் (12.68 மீற்றர்) வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.மேலும், 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி வீராங்கனை விநாயகமூர்த்தி சங்கீதா (30.48 மீற்றர்) வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement