• May 17 2024

டெங்கு பரவல் தொடர்பாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை! samugammedia

Chithra / May 9th 2023, 9:16 am
image

Advertisement

டெங்கு பரவலை தடுக்க அனைவரும் வருமுன் காப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டிலீப் எச் லியனகே தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு தொடர்பில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்புக்கள் அவசியம். குறிப்பாக டெங்குநோய் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கிராம மற்றும் பிரதேச மட்டங்களில் குழுக்களை அமைத்து அதன் மூலம் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இதேவேளை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்து கள ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அனைத்து மட்டத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். 

விசேடமாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையை நாடி அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

டெங்குநோய் குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.

டெங்கு பரவல் தொடர்பாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia டெங்கு பரவலை தடுக்க அனைவரும் வருமுன் காப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டிலீப் எச் லியனகே தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு தொடர்பில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்புக்கள் அவசியம். குறிப்பாக டெங்குநோய் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.கிராம மற்றும் பிரதேச மட்டங்களில் குழுக்களை அமைத்து அதன் மூலம் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.இதேவேளை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்து கள ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.இந்த செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அனைத்து மட்டத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். விசேடமாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையை நாடி அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.டெங்குநோய் குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement