தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா, ஜெ.றஜீவன் ஆகியோர் தீவகப் பகுதிகளுக்கு நேற்றையதினம் (27) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தனர்.
அனலைதீவு, மண்டைதீவு மற்றும் வேலணை ஆகிய தீவுகளுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு அரச அதிகாரிகள் மற்றும் மக்களோடு கலந்துரையாடி குறைபாடுகளை கேட்டு அறிந்தனர்.
அனலைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு தொகை உலர் உணவுப் பொருட்களை வழங்கினர்.
பின்னர், அனலைதீவு மின் உற்பத்தி நிலைய மின் பிறப்பாக்கிகளை ஆராய்ந்ததோடு அனலைதீவு வைத்தியசாலைக்கும் விஜயம் மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து வேலணை மற்றும் மண்டைதீவுக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்குள்ள வைத்தியசாலைகளின் நிலவரங்களை ஆராய்ந்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் எம்.பிகள் யாழ் தீவகப் பகுதிகளுக்கு திடீர் விஜயம். தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா, ஜெ.றஜீவன் ஆகியோர் தீவகப் பகுதிகளுக்கு நேற்றையதினம் (27) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தனர்.அனலைதீவு, மண்டைதீவு மற்றும் வேலணை ஆகிய தீவுகளுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு அரச அதிகாரிகள் மற்றும் மக்களோடு கலந்துரையாடி குறைபாடுகளை கேட்டு அறிந்தனர். அனலைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு தொகை உலர் உணவுப் பொருட்களை வழங்கினர். பின்னர், அனலைதீவு மின் உற்பத்தி நிலைய மின் பிறப்பாக்கிகளை ஆராய்ந்ததோடு அனலைதீவு வைத்தியசாலைக்கும் விஜயம் மேற்கொண்டனர்.அதனைத் தொடர்ந்து வேலணை மற்றும் மண்டைதீவுக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்குள்ள வைத்தியசாலைகளின் நிலவரங்களை ஆராய்ந்தனர்.