• Nov 24 2024

தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டி- முல்லை மாணவி வரலாற்று சாதனை..!

Sharmi / Oct 7th 2024, 11:03 am
image

கண்டி உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 4, 5, 6 ஆம் திகதிகளில் முதன்முறையாக நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான வூசோ (Wushu) குத்துச் சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவர்கள் இருவர் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி ஜீட் வசீகரன் டிவோன்சி 18வயதுக்குட்பட்ட 60-65Kg எடைப்பிரிவில் தங்க பதக்கத்தினையும், முல்லைத்தீவு மகா வித்தியாலய மாணவன் நாகேஸ்வரன் கோபிகன்  20 வயதுக்குட்பட்ட 70-75Kg எடைப்பிரிவில் வெண்கல பதக்கத்தினையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்து பாடசாலைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். 

குறித்த மாணவர்கள் பயிற்றுவிப்பாளர் தேசிந்தனின் பயிற்றுவிப்பில்  தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்று வடமாகாணத்திற்கு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

குறித்த மாணவி கடந்த 28,29,30 ஆம் திகதிகளில் இரத்தினபுரி நியூ டவுன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ (Taekwondo) போட்டியில் 18 வயது பிரிவில் 59-63 கிலோ எடைப்பிரிவில் குறித்த மாணவி வெண்கல பதக்கத்தினை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சாதனை படைத்த வீரர்களுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டி- முல்லை மாணவி வரலாற்று சாதனை. கண்டி உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 4, 5, 6 ஆம் திகதிகளில் முதன்முறையாக நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான வூசோ (Wushu) குத்துச் சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவர்கள் இருவர் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி ஜீட் வசீகரன் டிவோன்சி 18வயதுக்குட்பட்ட 60-65Kg எடைப்பிரிவில் தங்க பதக்கத்தினையும், முல்லைத்தீவு மகா வித்தியாலய மாணவன் நாகேஸ்வரன் கோபிகன்  20 வயதுக்குட்பட்ட 70-75Kg எடைப்பிரிவில் வெண்கல பதக்கத்தினையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்து பாடசாலைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். குறித்த மாணவர்கள் பயிற்றுவிப்பாளர் தேசிந்தனின் பயிற்றுவிப்பில்  தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்று வடமாகாணத்திற்கு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.குறித்த மாணவி கடந்த 28,29,30 ஆம் திகதிகளில் இரத்தினபுரி நியூ டவுன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ (Taekwondo) போட்டியில் 18 வயது பிரிவில் 59-63 கிலோ எடைப்பிரிவில் குறித்த மாணவி வெண்கல பதக்கத்தினை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சாதனை படைத்த வீரர்களுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement