• Apr 28 2024

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ கூட்டணி - எதிர்க்கட்சி வரிசையில் இம்ரான் கட்சி..!samugammedia

mathuri / Feb 13th 2024, 7:02 am
image

Advertisement

பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்னும் நடவடிக்கைக்கு முடிவடைந்த நிலையில், இம்ரான் கான் கட்சி 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கட்சிகள், சுயேட்சைகள் 42 இடங்களை பிடித்துள்ளன.

மொத்தம் 264 இடங்களில் ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை. தனிப்பட்ட கட்சி அளவில் எடுத்துக் கொண்டால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. நாவஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் சேர்த்து பார்த்தால் இம்ரான் கானுக்கு சரியாக 135 இடங்கள் வரும். இது ஆட்சி அமைக்க போதுமானது.

ஆனால் நவாஸ் ஷெரீப் பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். இதை இரண்டு கட்சி தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். 

இந்த நிலையில், தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியிருந்தாலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் கோஹர் அலி கான் தெரிவிக்கையில், 

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுடனும் எங்களுக்கு கொள்கை முரண் உள்ளது. எனவே,இதில் எந்தக் கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம்.  அதைவிட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளோம். புதிய நாடாளுமன்றத்தில் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக பிடிஐ செயல்படும் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ கூட்டணி - எதிர்க்கட்சி வரிசையில் இம்ரான் கட்சி.samugammedia பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்னும் நடவடிக்கைக்கு முடிவடைந்த நிலையில், இம்ரான் கான் கட்சி 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கட்சிகள், சுயேட்சைகள் 42 இடங்களை பிடித்துள்ளன.மொத்தம் 264 இடங்களில் ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை. தனிப்பட்ட கட்சி அளவில் எடுத்துக் கொண்டால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. நாவஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் சேர்த்து பார்த்தால் இம்ரான் கானுக்கு சரியாக 135 இடங்கள் வரும். இது ஆட்சி அமைக்க போதுமானது.ஆனால் நவாஸ் ஷெரீப் பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். இதை இரண்டு கட்சி தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியிருந்தாலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சி அறிவித்துள்ளது.இது குறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் கோஹர் அலி கான் தெரிவிக்கையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுடனும் எங்களுக்கு கொள்கை முரண் உள்ளது. எனவே,இதில் எந்தக் கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம்.  அதைவிட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளோம். புதிய நாடாளுமன்றத்தில் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக பிடிஐ செயல்படும் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement